Posts

Showing posts from September, 2020

புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

சைவ ஸ்பெஷல்

Image
  சைவ ஸ்பெஷல்: அம்புளி சோறு: குழைய குழைய வேகவைத்த அரிசியுடன், வேளைப்பூவை போல தோற்றமளிக்கும் வெண்மையான கெட்டித்தயிர் கலந்து, கூழ்மாதிரி அரைத்து உண்ணும் உணவை, அக்காலத்தில் "அம்புளி சோறு" என அழைத்தனர். அதற்கு வெஞ்சனமாய்(Side dish) வேளைக்கீரையை கூட்டு வைத்து உண்டனர்.இதனை, "கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் தாதொரு மறுகின் போதொடு பொதுளிய வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ, ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை" எனும் புறநானூற்றின் பாடல் ஒன்றின் வாயிலாய் அறிய முடிகிறது. இதனை சங்ககால சோழனான கோப்பெருஞ்சோழன் தன் நண்பனான பிசிராந்தையார் பற்றி பாடும்பொழுது அவர் இருப்பிடமான பொதிகைமலையில் வாழ்ந்த மக்களின் உணவாக "அம்புளி சோறு" பற்றி சிலாகித்து பாடுகிறார். பாலுடை அடிசில்: அரிசியை தண்ணீரில் கலந்து தண்ணீரில் வேகவைத்து வடிப்பதுபோல், அக்கால தமிழர்கள் பாலினை கொதிக்க வைத்து, அதனுள் அரிசியினை களைந்து, வேகவைத்து அதனை வடித்து உண்டுள்னர். இதற்கு "பாலுடை அடிசில்" எனப்பெயர். திருமணம் முடிந்து வந்த புதுமகள், தான் புகுந்த வீட்டில் இச்சோற்றினை வடித்ததாக அகநானூறு கூறுகிறது. "விழவுடன் அய

ஞாயிறு Special

Image
 ஞாயிறு Special : புரட்டாசியாவது,ஐப்பசியாவது! சங்ககாலத்தில் இப்படி யாரும் நோன்பு நோற்றதில்லை, இன்று பெரும்பாலும் வைணவக்குடும்பங்களில் புரட்டாசி நோன்பு இருப்பது வாடிக்கை, அவர்களை பார்த்து சைவக்குடும்பங்களிலும்(சிவமதம்) விரதமிருந்து தூய்மையை பின்பற்றி வருவது அதிகரித்து வருகிறது!  ஞாயிறு சிறப்பு பதிவாக, சங்ககாலத்தில் எப்படி விதவிதமாய் அசைவ உணவை உண்டனர் என காண்போம். சுட்டகறி(Barbeque) : தன்னிடம் பாடல்பாடி தமிழை வளர்த்த புலவர்களை கரிகால் பெருவளத்தான் பரிசிலை வாரிவழங்கியது மட்டுமல்லாமல், அசைவ உணவை வழங்கி அவர்கள் வயிற்றையும் நிரப்பியுள்ளார். கொழுத்தசெம்மறி ஆட்டின் இறைச்சியை இரும்புகம்பியில் கோர்த்து சுட்டு வற்புறுத்தி உண்ண கொடுத்துள்ளான். இறைச்சியின் சூட்டினை தணிக்க தம் வாயின் இருபக்கமும் ஊதி, அவற்றின் வெம்மையை தணித்து புலவர்கள் உண்டுள்ளனர். பற்களின் முனை மழுங்கும் அளவிற்கு சுடச்சுட விருந்தளித்துள்ளார் செம்பியற்கோ. இதனை  "காழில் சுட்ட கோல்ஊன் கொழும்குறை ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி" என்ற பொருநராற்றுப்படை பாடல் கூறுகிறது. செம்மறியாடு மட்டுமின்றி மீன், முயல், உடும்பு, கோழி, பன்றி போன்