Posts

Showing posts from August, 2020

புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

சங்க இலக்கியத்தில் நெய்தல்

Image
  சங்க இலக்கியத்தில் நெய்தல்: "வருணன் மேய பெருமணல் உலகம்" ஐந்து திணைகளில் ஒன்றான நெய்தல் நிலத்தினை குறிக்கும் தொல்காப்பிய அகத்திணை பாடல்இது.கடற்கரை பெருமணல் பரப்பாய் இருந்ததனால் இவ்வாறு குறித்தனர். மேலும் புறநானூறு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலையில் கடல்நிலம் தொடர்பாய் எண்ணற்ற பாடல்கள் உள்ளது. இந்நில மக்களை நுளையர், பரதவர் என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. நெய்தல்நில தலைவனை குறிக்க துறையவன், சேர்ப்பன், புலம்பன், கொண்கன் என அழைத்தனர். பட்டினப்பாலை "புல்தலை இரும்பரதவர்" என இவர்களை அழைக்கிறது! தலையில் கடல்நீர் பட்டு அவர்கள் முடி பழுப்பேறிவிட்டது என்பது கருத்து. கடல்தொழில் புரிவதற்கு தமதுபடகில் சென்று உறுதியான புரிகளை உடைய கயிற்றின் முனையில் உறுதியான. இரும்புஉளியை இறுக்கமாய் பிடித்து, பெரியமீனை கண்டதும், வேகமாய் எறிந்து மீனை பிடிப்பர், கலங்காத மனம் கொண்டு இரவிலும் மீன்பிடிக்க செல்வர். அந்த மீனை அதிகாலையில் கரைக்கு இழுத்து வந்து குவித்து, உறவினருக்கும் நண்பர்களுக்கும் பிரித்தளித்து, நண்பர்கள் புடைசூழ தேன்சுவையுள்ள கள் அருந்தி மகிழ்வர். " கயிறுகடை யாத்த கடுநடை எறிஉளித

புனல்நீர் விழா

Image
புனல்நீர் விழா: நிலையான, அதேசமயம் பெரும்பிரவாகமாய் தோன்றி அடிக்கடி ஊரை அழிக்காத ஒரு ஆற்றங்கரையில் தான் நிலையான குடியிருப்பு தோன்றும், விவசாயம் பெருகும், நாகரீகம் செழிக்கும். அவ்வாறு இயற்கை நமக்களித்த கொடைதான் நம் காவிரி. அந்த காவிரியும் அடிக்கடி தன்போக்கை மாற்றி தம் குடியினரை அழித்த வரலாறு சங்கஇலக்கியத்திலும் உள்ளது. அப்போது வந்தான் ஒரு நாயகன் 2000 வருடம் கடந்தும் இன்றும் நாம் நினைவில் வைத்து போற்றக்கூடிய தலைவன். அவனாலே இன்று கரைபலப்படுத்தப்பட்டு கடலென வந்த காவிரியை தடுத்து பிரித்து திசைமாற்றி இன்றுவரை எத்துணையோ குடும்பம் செழிக்க காரணமானான், அவன் யாரென நமக்கு சொல்லிதெரிய வேண்டியதில்லை. சின்னபிள்ளையும் அவன்புகழ் பாடும். அவன் கட்டிய அணையின் தொழில்நுட்பத்தை புகழ்ந்து வியந்த வெள்ளைக்காரன் 'Grand anaikut' எனபெயரிட்டு அழைத்தான்.  காவிரியின் பெருமை : "வசையில் புகழ்வயங்கு வெண்மீன், திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய களியுணவின், புட்டேம்பப் புயன்மாறி வான் பொய்யினும் தான் பொய்யா, மலைத்தலை இய கடற்காவிரி" என பட்டினப்பாலை காவிரியை வெள்ளி விண்மீனுக்கு ஒப்புமை கூறி, அக்கோளைப்போல் த