Posts

Showing posts from November, 2020

புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

திருக்கார்த்திகை சில குறிப்புகள்

Image
 திருகார்த்திகை சில குறிப்புகள்: வானத்தில் மழை இல்லா "முழுநிலவு அறுமீன்" என போற்றப்பட்ட கார்த்திகை நட்சத்திரம் அன்று, நடுஇரவில் அன்றைய நம் தெருமுழுக்க அணிஅணியாய் விளக்குககள் ஏற்ப்பட்டு ஒளியூட்டப்பட்டன. அன்றைய பொழுது வீட்டு வாயிலிலும், வீதீகளிலும் அழகிய மாலைகள் தொங்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. இவ்விழாவே அன்றைய சங்ககால மக்களிடையே "கார்த்திகை பெருவிழா"வாய் கொண்டாடப்பட்டுள்ளது, இதனை கீழ்க்கண்ட அகநானூற்று பாடல் ஒன்று கூறுகிறது. "மழை கால் நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து, அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி, பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய            விழவு உடன் அயர,வருகதில் அம்ம"! மா ஒளி சுற்றுதல்: திருவண்ணாமலை, சேலம், சில தொண்டைமண்டல பகுதிகளில் மாஒளி சுற்றுதல் எனும் சடங்கு இன்றுவரை நடைபெறுகிறது.பனம்பூவைக் கருக்கித் தூளாக்கி துணியில் பொட்டலமாகக் துணியில் கட்டி வைத்துக்கொள்வார்கள். இப்பொட்டலத்தை பனைஓலை மட்டைகளின் நடுவே வைத்துக் கட்டிவிடுவார்கள். இதை நீண்ட கயிற்றில் கட்டிவைத்துக்கொண்டு நெருப்பை வை

ஒற்றன் குரல் எழுப்பும் காக்கை

Image
ஒற்றன் குரல் எழுப்பும் காக்கை : "இனிப் பிறிதுண்டோ அஞ்சல் ஓம்பென அணிக் கவின் வளர முயங்கி நெஞ்சம் பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும் குளித்துப் பொரு கயலிற் கண்பனி மல்க ஐயவாக வெய்ய உயிரா  இரவும் எல்லையும் படரட வருந்தி அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்பத் தம்மலதில்லா நம்மிவண் ஒழியப் பொருள் புரிந்து அகன்றனராயினும் அருள் புரிந்து வருவர் வாழி தோழி பெரிய  நிதியஞ்சொரிந்த நீவி போலப் பாம்பூன் தேம்பும் வறங்கூர் கடத்திடை நீங்கா வம்பலர் கணையிடத் தொலைந்தோர் வசிபடு புண்ணின் குருதி மாந்தி ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல் இல்வழிப் படூஉங் காக்கைக் கல்லுயர் பிறங்கல் மலை இறந்தோரே". அகநானூற்றின் பாடல் இது புகளூர் தமிழி கல்வெட்டில் இடம்பெற்ற "பெருங்கடுங்கோ" இயற்றிய பாடல் இது. இதில் அன்றைய காட்டுப்பாதையை அழகாய் வருணிக்கிறார். பாம்புகள் நெளியும் அந்த பாதையில் செல்வோரை அந்நிலகள்வர்கள் அம்பெய்து கொல்வர். அவ்வாறு இறந்தோரின் உடலிலிருந்து வழிந்து உறைந்து கிடக்கும் சதையினை இளம்ரத்தத்தோடு அங்குள்ள காக்கைககள் கூடிச்சென்று கொத்தி அருந்தும். இதனால் இயல்பாய் கரையக்கூடிய அதன் குரல்வளம் மாறுபட

ஆநிரை இறைச்சி :

Image
  ஆநிரை இறைச்சி : சங்க இலக்கியத்தில் அசைவ உணவு குறித்து நிறைய குறிப்புகள் உள்ளது. அதில் மாட்டிறைச்சி குறித்த குறிப்புகளை காண்போம். நற்றிணை பாடல் ஒன்றில் புலையர்கள் ஆவுறித்து தின்றதை கூறுகிறது. இதே கருத்தை நாவுக்கரசரும் தம் ஆறாம் திருமுறையில் கீழ்க்கண்டவாறு பாடுகிறார், "ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே" கூத்து பாடல்களை பாடும் பாணன் இளம் கன்றின் கறியை உண்பான் என அகநானூறும், சிறுபாணாற்றுப்படையும் கூறுகிறது. உழவர் கூட்டம் பசுவின் கறியை உண்டதை அகநானூற்றின் பாடல் கூறுகிறது. இவர்கள் மட்டுமின்றி பார்ப்பனரான கபிலரும் மாட்டிறைச்சியை விரும்பி உண்டுள்ளார், இதனை புறநானூறு கூறுகிறது. எனவே உணவு பழக்கவழக்கங்கள் காலத்திற்கேற்றவாறு மாறும் என்பதே திண்ணம்.

பேடியாடல்

  பேடியாடல் : ஆடவர் பெண்வேடம் பூண்டு ஆடும் கூத்தினை "பேடியாடல்" என சங்க இலக்கியங்கள் கூறுகிறது. பாண்டரங்கம், துடியாடல், மல்லாடல், குடக்கூத்து, கொடுகோட்டி, பேடியாடல் எனும் ஆறுவகை ஆடல்கள் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. மாதவி ஆடிய பதினொருவகை கூத்துகளில் இதுவும் ஒன்று. வாணாசுரன் எனும் அரக்கனின் மகள் உசை என்பவளின் கனவில் காமனின் மகன் அநிருத்தனை கண்டு காமுற்று, களவுக்காதல் தோன்ற, தன் தோழி சித்திரலேகையை வேண்டி அநிருத்தனை அடைந்தே தீருவது என உசை முடிவெடுத்தாள்.இவ்விஷயம் அரக்கவேந்தனுக்கு தெரியவர அநிருத்தனை சிறையிலடைத்தான். சிறையில் உசையும் அநிருத்தனும் காதல் வளர்த்தனர். அநிருத்தனை மீட்க காமனும், திருமாலும், அயிராணியும் வந்தனர். அயிராணி கடையமும், திருமால் குடக்கூத்தும், காமன் பேடியாட்டமும் ஆடி அரக்கனின் நகரில் நுழைந்ததாய் சிலம்பு கூறுகிறது. காணொளி உதவி: Parthiba Raja sir

சங்ககால ப்ளேபாய்

Image
  சங்ககால ப்ளேபாய்க்கு கொடுத்த தண்டனை: கரும்பும், பூக்களும் நிறைந்த வயல்வெளி அதிகம் உடையது கள்ளூர் எனும் சிற்றூர். அவ்வூரிலுள்ள தலைவன் ஒருவன், தலைவியை மேல் காதல் கொண்டான். இருவரும் அக்கால வழக்கப்படி களவொழுக்கம் கொண்டு, காமம் தீர்த்து, தம் ஆசையை தீர்த்தனர். ஆசைதீர்ந்ததும், அவள்மேல் ஈர்ப்பு குறைந்தது அவனுக்கு, தன்னை திருமணம் செய்ய சொல்லி தலைவி வற்புறுத்த, அவளை யார் எனவே தெரியாது என சத்தியம் செய்தான். அக்கொடிய வழக்கு வழக்காடுமன்றம் சென்றது. இருவரின் உறவை விசாரிக்க ஆரம்பிக்க, அவ்விருவரும் ஒன்றாய் சுற்றியதை கண்ட ஊரார் சிலர் சாட்சியளித்தனர். அவனது குற்றம் உறுதியானது. அவனக்கு கொடூர தண்டனையளிக்க முடிவெடுத்தனர். ஊரின் மத்தியிலுள்ள பெருமரம் ஒன்றில் அவனை கட்டி வைத்தனர், சுண்ணாம்பு கலந்த நீரினை அவனது தலையிலிருந்து ஊற்றி நீராட்டினர். அவனுக்கு தண்டனை அளிக்கையில் ஊரார் அனைவரும் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். இதனை கீழ்க்கண்ட அகநானூற்று பாடல் வாயிலாய் அறியலாம். பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில் மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப் பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின் நுகர்வ

மழவர் களவு

Image
  மழவர் களவு:  பெருவழிகளில் பயணிக்கும் வணிகர்களை குறிவைத்து பாலைநில மழவர்கள் வளைந்த வில்லையும், அம்பையும் கொண்டு வழிப்பறி நிகழ்த்தினர். மழவர்களின் இச்செயலை கண்டு அஞ்சி மற்றகுடியினர் ஊரை காலி செய்வர். வனவிலங்குகள் அதிகம் உலவும் பீர்க்கங்காய் கொடி படரும். ஆட்கள் இல்லாததால் செங்கலினால் கட்டப்பட்ட வீடும், கோவிலும், முருங்கைகீரையை உண்டு வாழும் யானை தன் பிடரியை தேய்ப்பதால் அழிந்துபடுகிறது என அகநானூறு பாடல் ஒன்று கூறுகிறது. மழவர்களின் வழிப்பறியினால் இறந்துபடும் வழிப்போக்கர்களின் நினைவாய் கற்குவியலை ஏற்ப்படுத்தி வணங்கினர். அதில் மல்லிகை கொடி படர்ந்ததாய் மற்றொரு அகநானூற்று பாடல் கூறுகிறது. கீழே படத்தில் காணப்படும் இரும்புகால சின்னத்தை "உயர்பதுக்கை" என இலக்கியங்கள் கூறுகியது. அக்காலத்தில் இப்பதுக்கைகள் சுற்றுச்சுவருடன் பிரம்மாண்டமாய் இருக்கும். இதில் மழவர்கள் ஒழிந்துகொண்டு ஆநிரையை கவர்ந்துள்ளனர். இம்மழவர் குடியினர் சிந்துசமவெளியிலிருந்து தென்னகம் நோக்கி நகர்ந்ததாய் "Walking with the unicorn" எனும் ஆராய்ச்சி கட்டுரையில் ஆய்வறிஞர்.திரு.ஐராவதம் மகாதேவனும், jonathan mark kenoyer