புறநானூற்றில் பேய்

சங்ககால Variety சமையல்:
வேளைப்பூ மிதவை:
வேளைக்கீரை என்பது சித்தமருத்துவத்தில் வாதநோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. அக்கீரையை சிறிது முற்ற விட்டால் கிடைக்கும் வேளைப்பூ, சிறு குழந்தைகளின் வயிற்றுப்போக்கை சரிசெய்ய உதவும், அத்தகைய மருத்துவ குணமுடைய வேளைப்பூவினை,ஆயர்மகள் கொய்து அதனுடன் கெட்டித்தயிரை கலந்து, நன்றாய் கரைத்து அதனை உண்டதாய் புறநானூறு கூறுகிறது
"வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்"
குறும்பூழ் குழம்பு:
தனக்கு நல்ல செய்தி அறிவித்த ஏவலனுக்கு,நெய்ஊறிய குறும்பூழ் சம்பாரத்தோடு கூடிய கறியுடன் சேர்த்த சோற்றினை பெருவாய் என தலைவி வாழ்த்தினால், குறும்பூழ் என்பது காடை ஆகும். காடையை பிடிக்க கண்ணி கட்டுவது இன்றும் கிராமங்களில் வழமை. காடைக்கு கண்ணி கட்டுவது என்பது சாதாரணமானதல்ல, சிறு சப்தமோ அல்லது கண்ணிவைப்பது தெரிந்தாலே அங்கு காடை இருப்பிடத்தை காலிசெய்துவிடும், குறுந்தொகை குறும்பூழ் உணவை பற்றி கூறுகிறது.
கல்யாண மோர்க்குழம்பு:
பிறந்தகத்தில் செல்லமாய் வளர்ந்த பெண், திருமணம் முடித்து தம்காதல் கனவனுக்காய் ஆசையாய் புளிப்பும் இனிப்பும் கலந்த முளிதயிர் நிரம்பிய சுவைமிக்க மோர்க்குழம்புஉணவு சமைத்ததை குறுந்தொகை கூறுகிறது.
"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின் 5
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணு"
ஊறல் கள்:
குறிஞ்சி திணை மக்கள் தம் நிலங்களில் அதிகம் விளையும் உறுதியான உள்ளீடு அகலம் குறைந்த பெரிய மூங்கில்களில் சரியான மூடியிட்டு அதில், வேட்டைக்கு செல்கையில் மலைத்தேன், குடிநீர், பால் போன்றவற்றை சேமித்து வைக்கும் பழக்கமுடையவர்கள்.
மூங்கிலின் உள்ளே நன்கு கனிந்த மாங்கனிகளையும், பலாச்சுளைகளையும், மமலைத்தேனையும் கலந்து ஒன்றாக அரைத்து, அதனுள்ளே கள்ளினை இட்டு, மண்ணுக்குள்ளே பல நாட்கள் புதைத்து வைப்பர், இதனை அகநானூறு எடுத்துரைக்கிறது
"என் ஆவதுகொல் தானே முன்றில்,
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து,
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி,
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ,
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல்
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல்
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக்
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர்"
இதில் ஊறல்போட்டு தயாரிக்கும் மதுபானத்தை "தோப்பி" என்கிறது சங்க இலக்கியம்.
பயற்றுப்பால்:
இன்றும் நம் வீட்டில் மூத்தோர்கள் உளுந்து,பருத்தி, ஆகியவற்றில் பால் கலந்து அதனுடன் வெல்லத்தினை கலந்து மாலைவேளைகளில் கொரித்து உண்ண கொடுப்பர். சங்ககாலத்தில் இதனையே கொஞ்சம் மாறுதலாய் கொள்ளு, பயறு, பால் இவற்றை ஒன்றாய் கலந்து அதனை கூழ்போல மாற்றி அருந்தினர் என்கிறது அகநானூறு
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல, 15
மருதமர நிழல், எருதொடு வதியும்
காமர் வேனில்மன் இது,
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே!
Comments
Post a Comment