புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

முல்லைநில உணவு முறை

#சங்க_இலக்கியங்களில் 
#தமிழர்_உணவு_முறைகள்

இன்றைய நாட்களில் செவ்வாய், வெள்ளி பொதுவாக அசைவம் சாப்பிடுவதில்லை. சில வீடுகளில் வியாழன், சனியும் இந்த லிஸ்டில் சேரும். இடையிலுள்ள நாட்களில் பிரதோஷம், அம்மாவாசை, சஷ்டி இன்னும் வேறுசில விஷேசம் வந்தால் அதுவும் கோவிந்தா. இது இந்து மதத்தை பின்பற்றுவர்களுக்கு மட்டும், இந்து மதத்திலேயே சைவர், நனிசைவர் உண்டு. நல்லா இளம் வெள்ளாட்டுகரிய படைச்சிட்டு இருந்த வேலனையும் இப்ப சைவமாக்கியாச்சி! ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் பாரபட்சம் பார்க்காமல் அசைவம் விரும்பி உண்ணும் ஆட்கள் அதிகம். ஆகவே ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் சங்க இலக்கிய போஸ்ட் இது.

முல்லைநில கோவலர் பகுதிகளில் முயல்கள், மான்கள், வான்கோழிகள் அதிகம் உண்டு! அவற்றை கொன்று அந்த ஊன்சோற்றை உண்பர்.மேலும் பொன்னை நறுக்கியதுபோல ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி பதம்பார்த்து ஆக்கிய சோற்றை உண்டனர்(பிரியாணி?)

நள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ்
உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள்மோர் மாலும்......."

பெரும்பாணாற்றுப்படையில் வரும் பாடல் இது. கரிகாலனிடம் பதினாறுகால் மண்டபம் பரிசாய் பெற்ற கடியலூர் உருத்திரங்கண்ணனார் இதை பாடுகிறார். கருந்தோலையுடைய ஆயர் மகள் தயிரை கடைவாள், அவள் கடையும்போது எழும் ஒலி புலி உறுமுவதுபோல் இருக்கும். அவ்வாறு கடைந்த தயிரையும் மோரையும் விற்று வரகரிசி வாங்குவர். அதனை அவரை பருப்பு கலந்து உண்டனர். மேலும் சிவந்த அவரை விதை, மூங்கில் அரிசி, ஆகியவற்றை புளிகரைக்கப்பட்ட உலையில் போட்டு குழைத்து கூழாக உண்டனர்.

முல்லை நில மக்கள் இவ்வாறு தமது செல்வங்களான ஆநிரைகளின் பால், வெண்ணெய், தயிரை விற்று, தானியங்களை மருதமக்களிடம் பெற்று, தாமே வேட்டையாடி முயல், மான்களை கொன்று பிரியாணி போன்ற உணவினை செய்தும், இடையிடையே புளிக்கூழ், பருப்புசோறு செய்து செழிப்போட வாழ்ந்தது தெரிகிறது





Comments

Popular posts from this blog

சனிக்கிழமை சங்ககால அசைவ ஸ்பெஷல்

ஞாயிறு Special

சைவ ஸ்பெஷல்