புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

விருந்து உணவு

செல்வந்தர் உணவு:

இரண்டாயிரம் வருடம் முன்பு செல்வந்தர் வீட்டில் எப்படி உணவு உண்டனர் என சில சங்க இலக்கிய பாடல்கள் கூறுகிறது! அவற்றை காண்போம்.

"சோறுவாக்கிய கொழுங்கஞ்சி யாறுபோல பரந்தொழுகு"

செல்வந்தர் வீட்டில் வடித்தஅரிசியின் கஞ்சி ஆற்றைப்போல பரந்தோடியது என பட்டினப்பாலை கூறுகிறது. அந்த அளவிற்கு அவர்கள் வீட்டில் சோறுபொங்கி வறியோருக்கும் சுற்றத்தாருக்கும் உணவளித்து மகிழ்ந்தனர்.
குறுகிய கால்களை உடைய பன்றியை சிறுசிறுதுண்டாக நறுக்கி அதை நெய்யில் பொறித்தனர். இறைச்சி வறுபடும் இந்த ஏகாந்த இசையை கேட்டு யானைகள் மயங்கின என புறநானூறு ஒருபாடலில் கூறுகிறது! மன்னர்களின் வாழ்க்கை இன்னும் ஏகபோகம்,
மங்கையர் தங்ககலத்தில் கள் ஊற்றிக்கொடுத்தனர், அதனை மன்னன் உண்டு மகிழ்ந்ததை,

"ஒன்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய" எனும் புறநானூற்றின் மற்றொரு பாடல் விளக்குகிறது. மேலும் அமிழ்தத்தைபோல சுவையுடைய அடிசிலை(பொங்கல் போன்ற உணவு) வெள்ளிக்கிண்ணத்தில் உண்டு மகிழ்ந்தனர்.

அருகம்புல்லை மட்டும் தின்று வளர்ந்து கொழுத்த இளம் செம்மறிகிடாயை வெட்டி, அதனை இரும்பு அலகால் குத்தி அதனை வாட்டி உண்டனர்( இன்றைய Barbeque போல) ஓரளவிற்கு மேல் கறிச்சோறு தின்பதை நிப்பாட்ட இனிப்பு பணியாரம் உண்டனர். இதனால் அவர்களது பற்கள் தேய்ந்துபோனதென பரிசில் பெற்ற ஒரு பாணன், பொருநராற்றுப்படையில் கூறுகிறான்.

Comments

Popular posts from this blog

சனிக்கிழமை சங்ககால அசைவ ஸ்பெஷல்

ஞாயிறு Special

சைவ ஸ்பெஷல்