புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

சங்ககால மீன்உணவு

சங்ககால மீன்உணவு:

நழுவி ஓடும் வரால் மீனை, அதன்போக்கில் அலைந்து பிடித்து இரண்டுபகல், இரண்டு இரவு இனிமை பிறக்கும்படி புளிக்கவைத்து, அதன்பின் அதனை வெண்ணீரில் வேகவைத்து, இன்றைய சூப் போன்ற உணவை தருவர் அதற்கு நொறுக்குதீனியாக தொட்டுக்கொள்ள சுட்டுவாட்டிய மீனை விருந்தினருக்கு தந்து உபசரித்து மகிழ்ந்தனர்.

(வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த 
வெந்நீர ரரியல் விரலலை நறும்பிழி
தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்)

சிறிய வடிவ ஆரல்மீன் நன்னீரில் வாழும் வகை. கள்ளை உண்ட மயக்கத்தில் மக்கள் ஆரல் மீனை சுட்டு தின்றதை புறநானூறு கூறுகிறது.

(.....காமம் வீடவாரா
ஆரற் கொழுஞ்சு டங்கவு டாஅ")

தற்போது இறால் என நாம் கூறும் உணவை அன்று இரவுமீன் என அழைத்தனர். இதனை பொறித்து தின்றனர், மேலும் தீயினில் வாட்டி சுட்டும் உண்டனர்.

(கலிமாக்கள்
கடலிறவின் சூடு தின்றும்)

கடலில் ஏகப்பட்ட மீனினங்கள் இருந்தாலும் சுறாமீன் பற்றிய குறிப்பே அதிகம். கொம்புசுறா, பால்சுறா, பேய்ச்சுறா, வேளாச்சுறா, குரங்கன்சுறா, செஞ்சுறா என இதில் லவகையுண்டு.
மிகமனச்சுரம் கொண்ட பரதவர்களின் உறுதியான வலையை பிய்த்தெறிந்து அவர்களையே நடுங்கச்செய்யும் குணம் கொண்டது இம்மீன் என நற்றிணை கூறுகிறது. குன்றுபோல் பரந்துகிடக்கும் சுறாவை பிடித்து கொண்டுவந்து தம் பாக்கத்தில் உள்ளவருக்கு பரதவதலைவன் பகிர்ந்து கொடுப்பான்.

குளம், குட்டையில் விரவி கிடக்கும் வரால் மீன், எளிதில் மாட்டாது சேறுஅதிகம் உள்ள பகுதியில் மறைந்து கிடக்கும்.குளத்தில் அனைத்து மீன்களும் பிடிபட்டவுடன், கடைசியாய் மாட்டுவது இம்மீனே. அன்றைய மக்கள் குளிர்ச்சிபொருந்தியகாலையில் நெய்யை சோற்றில் விட்டு, அதனை குழப்பிஅதன்பின் வரால்மீன் குழம்பில் உள்ள துண்டை விரும்பிஉண்டனர்.என நற்றிணை கூறுகிறது.

(....தண்புலர் விடியல்
கடுங்கண் வராஅல் பெருந்தடி...)

குளிர் நிறைந்த ஊரிலுள்ள ஒருவனது மகள் நறவு(கள்)உண்டு கழித்து போதையில் கிடந்த தம் தந்தைக்கு வரால் மீனை தம் கையால் பிடித்து, அரிந்து துண்டாக்கி விறகினை போட்டு எரித்து அந்த தணலில் சுட்டு தம் தந்தைக்கு கொடுத்தாள் என அகநானூறு கூறுகிறது.

ஆற்றில் அலையும் வாளை மீனை தமையன்மார் பிடித்துவர, அதனை தெருவினில் கூவி விற்று காசாக்கினர் தமக்கைமார் எஞ்சிய மீனை துண்டாக்கி ஊண்சோறு உண்டனர்.

இதிலிருந்து ஒன்னு நல்லா தெரியுது நல்லா உடல்நோக வேலை செய்றது அதன்பின் உடல்சோர்வு நீங்க குடிப்பது, நல்லா அசைவ உணவா ஒருகட்டு கட்டுவது என வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்.





Comments

  1. I liked this blog. You also show interest in social values.
    தொண்டை கால வாழ்வியல்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சனிக்கிழமை சங்ககால அசைவ ஸ்பெஷல்

ஞாயிறு Special

சைவ ஸ்பெஷல்