புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக...

மெல்லடை

மெல்லடை:

மதுரை நகரத்திற்கு தூங்காநகரம் என பெயர் உண்டு. நள்ளிரவு, அதிகாலை என
எப்போது சென்றாலும் உணவு உண்ண கடைதிறந்திருக்கும். பசியால் வாடுவோர் அங்கே காணமுடியாது. இவ்வழக்கம் இன்றுமட்டுமல்ல. ஈராயிரம் ஆண்டுகள் முன்பே மதுரை அவ்வாறே இருந்ததென மதுரைக்காஞ்சி கூறுகிறது.

"நல்வரி இறாஅல் புரையும் மெல்லடை
அயிர் உருப்பு உற்ற ஆடமை விசயம்
கவவொடு பிடித்த வகையமை மோதகம்
தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க"

இரண்டாம் சாமத்தில் அரிசிமாவில் வெல்லம் கலந்து செய்த இனிப்பு அடை, மோதகம் விற்கும் வணிகர் பற்றிய தகவலுடன், இரவு நேரத்தில் மதுரை நகரில் உண்பதற்குப் பல சிற்றுண்டிக் கடைகள் இருந்தன என இப்பாடல் மூலம்அறிய முடிகின்றது. இக்கால இனிப்பு தோசை போன்ற உணவே அது, முதன்முதலாய் இதற்கு தோசை என பெயர்வைத்த பெருமை கிருஷ்ணதேவராயரையே சேரும், காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் தோசை குறித்த கல்வெட்டு கிடைக்கிறது.தோசைக்கு அரிசி, உளுந்து, எண்ணெய் நிவந்தமாய் கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. மேலும் அச்சுதராயர் கல்வெட்டும் தோசை குறித்த தகவலை தருகிறது. இக்கல்வெட்டுகள் வைணவக் கோவில்களில் ஸ்ரீராமநவமியில் நைய்வேத்யம் அளிக்கப்பட்டதை கூறுகிறது. கன்னியாகுமரி பூதப்பாண்டி சிவன் கோவிலிலும் தோசை நைவேத்யமாய் அளிக்கப்படுகிது.






Comments

  1. அருமை பார்த்தி

    ReplyDelete
  2. மிகவும் அருமை நண்பரே

    ReplyDelete
  3. தோசை பற்றிய செய்தி நன்றாக இருந்தது

    ReplyDelete
  4. மதுரைவாசியாக மகிழ்ச்சி...

    சிறப்பு👍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஞாயிறு Special

திருக்கார்த்திகை சில குறிப்புகள்