புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக...

சங்க இலக்கியத்தில் சிற்றுண்டி

சங்க இலக்கியத்தில் Snacks :

"ஆற்றுக்குள் இறங்கி அரகரா என்றாலும்
சோற்றுக்குள் இருக்கிறான் சொக்கநாதன்"

இன்றும் நம் வீடுகளில் பரவலாய் காணப்படும் உணவு உளுந்தங்களி, பூப்பெய்த பெண்கள், மாதவிடாய் நாளில் உள்ள பெண்களுக்கு வீட்டில் உளுந்தங்கஞ்சி, உளுந்துகளி கொடுப்பர். அகநானூறு பாடல் ஒன்று இந்த உளுந்துஉணவைப்பற்றி கூறுகிறது.
"உளுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை" என பாடுகிறது. இதில் வரும் மிதவை என்பது சோறு ஆகும்.
பழைய சோற்றில் நீர்கலந்து, அதில் கெட்டித்தயிரை விட்டு கலக்கி உண்ணும் "நீராகாரம்" உணவை பிங்கல நிகண்டு மோழை, சுவாகு, கஞ்சிக்குகாடி என கூறுகிறது. அவித்தபயிருடன் நாட்டுச்சக்கரை கலந்து உண்ணும் உணவினை, பெரும்பாணாற்றுப்படை "கும்மாயம்" என்கிறது. மணிமேகலை இதனை "பயிற்றுத்தன்மை கெடாது கும்மாயமியற்றி" என்கிறது. இந்த கும்மாயஉணவு நிறைய கல்வெட்டுகளில் பயின்று வருகிறது! பாலோடு மாவு கலந்து அதனை வட்டவடிவில் உருட்டி அதனை நல்லெண்ணெயில் பொரித்து அப்பம் செய்து உண்டதை தீஞ்சோறு என மதுரைக்காஞ்சி கூறுகிறது. 
காராம்பசுவின் பாலில் வெள்ளப்பாகு கலந்து சுடச்சுட குடித்ததை புறநானூறு கூறுகிறது. இதனை பண்ணியம் என அழைத்துள்ளனர். தேங்காய், கதலிப்பழம், சீரகம், மிளகு, சுக்கு, ஆகியவற்றை கலந்துசெய்த உணவு "திருப்பணியாரம்" ஆகும். இதனை மதுரைக்காஞ்சி மோதகம் என்கிறது. பொரியில் பால்கலந்து இனிப்புச்சுவையுடன் கூட்டி உண்டதை(இன்றைய Kellogg's போல) ஐங்குறுநூறு கூறுகிறது.

இன்னும் ஏகப்பட்ட ஊட்டச்சத்து Snacks சாப்பிட்டு பீம்புஷ்டியாக திகழ்ந்தனர் நம் முன்னோர்கள். 



Comments