புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

புனல்நீர் விழா

புனல்நீர் விழா:

நிலையான, அதேசமயம் பெரும்பிரவாகமாய் தோன்றி அடிக்கடி ஊரை அழிக்காத ஒரு ஆற்றங்கரையில் தான் நிலையான குடியிருப்பு தோன்றும், விவசாயம் பெருகும், நாகரீகம் செழிக்கும். அவ்வாறு இயற்கை நமக்களித்த கொடைதான் நம் காவிரி. அந்த காவிரியும் அடிக்கடி தன்போக்கை மாற்றி தம் குடியினரை அழித்த வரலாறு சங்கஇலக்கியத்திலும் உள்ளது. அப்போது வந்தான் ஒரு நாயகன் 2000 வருடம் கடந்தும் இன்றும் நாம் நினைவில் வைத்து போற்றக்கூடிய தலைவன். அவனாலே இன்று கரைபலப்படுத்தப்பட்டு கடலென வந்த காவிரியை தடுத்து பிரித்து திசைமாற்றி இன்றுவரை எத்துணையோ குடும்பம் செழிக்க காரணமானான், அவன் யாரென நமக்கு சொல்லிதெரிய வேண்டியதில்லை. சின்னபிள்ளையும் அவன்புகழ் பாடும். அவன் கட்டிய அணையின் தொழில்நுட்பத்தை புகழ்ந்து வியந்த வெள்ளைக்காரன் 'Grand anaikut' எனபெயரிட்டு அழைத்தான். 

காவிரியின் பெருமை:

"வசையில் புகழ்வயங்கு வெண்மீன், திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய களியுணவின், புட்டேம்பப் புயன்மாறி
வான் பொய்யினும் தான் பொய்யா, மலைத்தலை இய கடற்காவிரி"

என பட்டினப்பாலை காவிரியை வெள்ளி விண்மீனுக்கு ஒப்புமை கூறி, அக்கோளைப்போல் தான் திசைமாறி சென்றாலும் செல்லும் இடமெல்லாம் வளம்கொழிக்க வைப்பாள் காவிரி என புகழ்ந்துபாடுகிறது.

"கோள்நிலை திரிந்து கோடை நீடினும்

தான்நிலை திரியாத் தண்டமிழ்ப்பாவை"

தமிழகத்தின் வளத்துக்கு காவேரி காரணமாயிருப்பதால் தண்தமிழ்ப்பாவை யென மணிமேகலலை கூறுகிறது.

புணல் விழா:

"மலிபுனல் பொருத மருதுஓங்கு படப்பை
கலிகொள் சுற்றமொடு கரிகால் காண"

என்ற பாடலில் அகநானூறு அன்று நீர்விழா நடத்தியதை கூறுகிறது. நேரடியாக சங்கஇலக்கியத்தில் ஆடிப்பெருக்கு நடந்ததனை குறிப்பிடாவிடினும் இந்நிகழ்வை இன்றைய ஆடிப்பெருக்கோடு ஒப்பிடலாம். இதேபோன்ற ஒரு குறிப்பை ஆட்டனத்தி, ஆதிமந்தி கதையிலும் காணலாம்.

"கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத்
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்
மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதி மந்தி காதலர் காட்டிப்
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்"

என பரணர் அகநானூற்றில் கூறுகிறார். ஆடல்கலையில் வல்லவளான ஆட்டனத்தியின் ஆடலில் மயங்கிய காவிரிஅன்னை தம் புணலால் அவளை தன்னுடன் அழைத்துக்கொண்டாள் என கூறுகிறார். இந்நிகழ்வு கழார்ப் பெருந்துறை எனும் காவிரி ஆற்றங்கரையில் புணல்நீர் விழாவில் நிகழ்ந்தது.தம்வாழ்வினை வழங்கொழிக்கச் செய்யும் காவிரி அன்னையை போற்றும் வரையில் சென்ற தலைமுறை வரையிலும் டெல்டா பகுதிகளில் வீட்டிற்கு ஒரு பொன்னியும் ஊருக்கொரு பொன்னியம்மனும் இருப்பாள். இந்நிகழ்வு காவிரிபாயும் இடங்களில் மட்டுமல்லாது, தாமிரபரணி, வைகை போன்ற துறைகளிலும் நடந்து வருகிறது!





Comments

Popular posts from this blog

சனிக்கிழமை சங்ககால அசைவ ஸ்பெஷல்

ஞாயிறு Special

சைவ ஸ்பெஷல்