புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

சங்க இலக்கியத்தில் நெய்தல்

 சங்க இலக்கியத்தில் நெய்தல்:


"வருணன் மேய பெருமணல் உலகம்"


ஐந்து திணைகளில் ஒன்றான நெய்தல் நிலத்தினை குறிக்கும் தொல்காப்பிய அகத்திணை பாடல்இது.கடற்கரை பெருமணல் பரப்பாய் இருந்ததனால் இவ்வாறு குறித்தனர். மேலும் புறநானூறு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலையில் கடல்நிலம் தொடர்பாய் எண்ணற்ற பாடல்கள் உள்ளது. இந்நில மக்களை நுளையர், பரதவர் என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. நெய்தல்நில தலைவனை குறிக்க துறையவன், சேர்ப்பன், புலம்பன், கொண்கன் என அழைத்தனர். பட்டினப்பாலை "புல்தலை இரும்பரதவர்" என இவர்களை அழைக்கிறது! தலையில் கடல்நீர் பட்டு அவர்கள் முடி பழுப்பேறிவிட்டது என்பது கருத்து. கடல்தொழில் புரிவதற்கு தமதுபடகில் சென்று உறுதியான புரிகளை உடைய கயிற்றின் முனையில் உறுதியான. இரும்புஉளியை இறுக்கமாய் பிடித்து, பெரியமீனை கண்டதும், வேகமாய் எறிந்து மீனை பிடிப்பர், கலங்காத மனம் கொண்டு இரவிலும் மீன்பிடிக்க செல்வர். அந்த மீனை அதிகாலையில் கரைக்கு இழுத்து வந்து குவித்து, உறவினருக்கும் நண்பர்களுக்கும் பிரித்தளித்து, நண்பர்கள் புடைசூழ தேன்சுவையுள்ள கள் அருந்தி மகிழ்வர்.


"கயிறுகடை யாத்த கடுநடை எறிஉளித்

திண்திமில் பரதவர் ஒண்சுடர்க் கொளீஇ” 


என மேற்கண்ட நற்றிணை பாடல்வாயிலாய் அறியலாம்.


மீன்பிடிக்கும் கருவிகள்:

வலை, தூண்டில், உளி ஆகியவற்றை பயன்படுத்தி மீன்பிடித்தனர்.

வலைவீசி சுறாவை பிடிக்க முயல்கையில், அந்த வலையை சுறாமீன் அறுத்து வெளியேறி படகினை தாக்கும், அச்சமயம் கூர்மையான உளியை எறிந்து மீனைப்பிடித்தான் என அகநானூறு கூறுகிறது. கடலில் பிடித்த மீனை கொண்டுவர பனையோலையில் நெய்த பெட்டியை பயன்படுத்தியுள்ளனர், இதனை பரதவரே முனைந்தனர்,இரவில் படகில் மீன்பிடிக்க செல்லுகையில் விளக்கை படகில் ஏற்றி வைத்தனர்.இவ்வாறு விளக்கேற்றி செல்லும் படகினை யானைக்கு முகபடாம் போர்த்தது போல் இருந்தது என உலோச்சனார் கூறுகிறார். அந்த விளக்கு கடற்காற்றினால் அணைந்து விடாமல் இருக்க விளக்கைச்சுற்றிலும் கிளிஞ்சல்களை வைத்தனர். இந்த விளக்குகளை எரிக்க மீனின் எண்ணெயை பயன்படுத்தினர். தமது மீன்வலைகளையும் படகுகளையும் கரைக்கு கொண்டுவந்து செப்பணிட்டனர். கடலில் செல்லுகையில் திசையை கண்டுபிடிக்க செவ்வாய் எனும் நட்சத்திரத்தை அடையாளமாய் வைத்ததை புறநானூறு கூறுகிறது. அமாவாசை, பௌர்ணமி அன்று கடலில் செல்லாமல் தம் மனைவியருடன் கழித்தனர்.

நெய்தல் வாழ்வியல்:

கடல்சார் மக்கள் மீன்பிடித்தலன்றி, உப்புத்தொழிலையும் மேற்கொண்டனர். அவ்வாறு விளைவித்த உப்பினை "உமணர்" எனும் குழுவினர் வண்டியில் வைத்து வாணிபம் செய்தனர்.

நெய்தல்நிலத்தின் ஊர்க்கூட்டம் பனைமரத்டியில் நடைபெற்றது. இம்மரங்களிலே கடவுள் உறைந்திருப்பர் என்ற நம்பிகை கொண்டிருந்தனர். தம்படகை மற்றுமொரு தெய்வமாய் கொண்டனர். அப்படகு பழுதடைந்தால் ஒதுக்கிவிட்டனர். நல்லநேரம் பார்த்தே கலன்களை கடலில் விட்டனர். கடலுக்குமீன்பிடிக்க கணவன் செய்கையில், மனையாள் தான்பிடித்த மீன், உப்பை விற்று அரிசிவாங்கி அயிலை மீன் துண்டு பொறித்து, கருவாட்டு குழம்பை கணவனுக்கு கொடுத்து அனுப்பியதை அகநானூறு கூறுகிறது. மீனைவிற்று கள்ளை வாங்கி மகிழ்வாய் தினமும் குடித்தனர். மீன்வரத்து அதிகம் இருந்தால் அதனை உப்புகண்டம் போட்டு விற்பனையும் செய்தனர்.





Comments

Popular posts from this blog

சனிக்கிழமை சங்ககால அசைவ ஸ்பெஷல்

ஞாயிறு Special

சைவ ஸ்பெஷல்