சங்ககால சாறும் ரசமும்
- Get link
- X
- Other Apps
சங்ககால சாறும் ரசமும்:
தேன்மாச்சாறு:
கூத்தராற்றுப்படையில் மாங்கனிசாற்றை தேனுடன் கலந்து உண்ட தகவல் கிடைக்கிறது.
"காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின்
காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல்
மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை
நூறொடு குழீஇயின கூவை சேறு சிறந்து
உண்ணுநர் தடுத்தன தேமா புண் அரிந்து"
வறுமையில் வாடும் கூத்தன் ஒருவன், நன்னனின் நாட்டின் செழிப்பை வரும்வழியில் கண்ட பாணருடனும், விறலியருடன் இத்தகவலை பகிர்ந்துகொள்கிறான். கூவைப்பழங்கள் அங்கு நிறைய பழுத்துகிடந்தது, மாம்பழம் தன் சுவையால் தம்மை உண்பவர் பிற கனிகளை விரும்பாதவாறு தடை செய்யும், எனவே "உண்ணுநர்த் தடுத்தன தேமா" என்றனர். சதைப்பிடிப்பும், மனமும், இனிய சுவையும் கொண்டு மாம்பழங்கள் நிறைய பழுத்து கிடந்ததாம். அத்தகைய சிறப்புடைய மாம்பழத்தை சாறாக்கி(சேறு) அதனுடன் தேன் கலந்து நன்னனின் நாட்டின் அருந்தினர் என்பதனை கூத்தராற்றுபடை கூறுகிறது.
(இம்மாமரமே நன்னன் நாட்டு காவல்மரமாகும், நன்னன் நாட்டு மாம்பழத்தின் மணமால் கவரப்பட்ட கோசர் மரபை சேர்ந்த கர்ப்பினி பெண் ஒருத்தி மசக்கை காரணமாய் ஒரு மாங்கனியை உண்டுவிட, கோசர்கள் எவ்வளவோ கெஞ்சியும், கேட்காம்ல் அப்பெண்ணை கொன்றுவிடுகிறான். அதன்பின் வெஞ்சினம் கொண்டு கோசர் அம்மரத்தையும், நன்னனையும் கருவறுத்தது தனிக்கதை)
இனிப்பு காய்கனி கலவை:
சேறு நாற்றமும், பலவின் சுளையும்,
வேறுபடக் கவினிய, தே மாங் கனியும்,
பல்வேறு உருவில், காயும் பழனும்,
கொண்டல் வளர்ப்பக், கொடி விடுபு கவினி
மென்பிணி அவிழ்ந்த, குறுமுறி அடகும்,
அமிர்தி இயன்று அன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்,
புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும்,
இன்சோறு தருநர், பல்வயின் நுகர
தூங்காநகரமான மதுரையின் சிறப்பை கூறும் இப்பாடலில், இரவும், பகலும் பலகடைகளும், குறிப்பாய் உணவுக்கடைகள் குறித்து பாடும் இப்பாடலில், பல்வேறு வகையான சிற்றுண்டி உணவுகளை பற்றி கூறுகிறது. அதில் ஒருகடையில் விற்ற, சிறப்பான உணவினை பற்றி கூறுகிறது, இனிய சுவையினையுடைய தேனை எடுத்து, அதனுள் நறுமணம் வீசும் பலாச்சுளையினை கலந்து, பழுத்த மாங்கனியையும், இன்னும் சில காய்கள், மற்றும் பொடியாக நறுக்கிய கீரைகளை, அதில் கொட்டி, அதற்கு சுவையூட்ட ஊடுபொருளாக பனைவெல்லத்தை கொட்டி, அதனை ஒரு கலவையாக பிசைந்து இன்றைய Fruit salad போன்றதொரு சுவைமிக்க உணவினை தயார்செய்து அதனை வறியோருக்கு கொடுத்து அறமாற்றியுள்ளனர்.
மாதுளை ரசம்:
"சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்
துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளை இப் பைந்துணர்
நெடுமரக் கொக்கின் னறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்"
கெட்டியான பசுவின் பாலை கடைந்து அதனை வெண்ணையாக்கி, அதனை சட்டியில் வதக்கி அதனுள் மிளகு, கருவேப்பிலை, சேர்த்து வதக்கி, மாதுளையின் முத்துபோன்ற பழங்களை எடுத்து அதனை கைகளால் சாறுபிழிந்து, அதனை ரசமாக செய்து, நெற்சோருடன் உண்டனர் என்பதனை பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment