புறநானூற்றில் பேய்

சனிக்கிழமை சங்ககால அசைவ ஸ்பெஷல்:
முயல்கறி:
முதல்நாள் இரவு வடித்த உணவை, இரவு நீர்ஊற்றி மறுநாள் மதியம் ஊறவைத்து, வயலில் உழன்று உழைத்து முடித்தபின் உழவர்கள் உண்டனர். இதற்கு "அவியலுணவு" என பெயர். இதற்கு தொட்டுகொள்ள காரம்சாரமாய் முயல்கறி தொட்டுக்கொண்டு உண்டனர். இப்பாடல் திருப்பிடவூர்(இன்றைய திருச்சி மாவட்டம் திருப்பட்டூர்) கிழான்மகன் பெருஞ்சாத்தனின் ஊரின் வளமை குறித்து நக்கீரர் பாடுகையில் இத்தகவலை தருகிறார்.
இந்த பெருஞ்சாத்தனே இன்றைய தமிழகத்தின் முதல் ஐய்யனார் என்ற கருத்தும் உள்ளது.
அவர் குறித்து மேலும் அறிய:
(https://seriesofgods.blogspot.com/2020/07/blog-post.html?m=1)
"மென்புலத்து வயல் உழவர்
வன்புலத்துப் பகடு விட்டுக்
குறுமுயலின் குழைச் சூட்டோடு
நெடுவாளை அவியல்”
என்ற புறநானூற்று பாடல் வரிகளின் மூலம் முல்லை நிலத்தில் தம் எருதுகளை மேயவிட்டுச் சிறிய முயலின் குழைவான இறைச்சியோடும், பல்வேறு வகை அவியல்களோடு பழையச்சோற்றை உண்ட மருத நில உழவன் பற்றிய செய்தியினை நாம் அறியலாம்.
காடை வறுவல்:
தலைவனின் பிரிவினில் வாடிய தலைவியை சந்தித்த அவளது பணிமகன் தான் தலைவனை சந்தித்த நற்செய்தியை கூறுகிறான்.அளவில்லாத ஆனந்தமடைந்த தலைவி அந்த பணிமகனுக்கு நெய்யினால் பொறிக்கப்பட்ட சுவைமிகுந்த "காடைக்கறி"யை உண்ண கொடுத்தாள், என்பதை கீழ்க்கண்ட குறுந்தொகை பாடல் வாயிலாக அறியலாம்.
"நெய்கனி குறும்பூழ் காய மாகஆர்பதம் பெறுக தோழி அத்தைபெருங்கல் நாடன் வரைந்தென அவனெதிர்நன்றோ மகனே யென்றனென்நன்றே போலும் என்றுரைத் தோனே"
மீன் கொழுங்குறை:
ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி,
மோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை,
செறுவின் வள்ளை, சிறுகொடிப் பாகல்,
பாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன,
மெய்களைந்து, இன்னொடு விரைஇ. .
மேற்கண்ட புறநானூற்று பாடலின் மூலமாய் மன்னனிடம் பாடி பரிசில் பெற்றதுடன், அவன்கொடுத்த சோற்றில் கலந்து வேகவைத்த மீன்உணவினை உண்டு, அந்த மயக்கம் தெளிவதற்குள் பழையசோறையும் கடைந்து கொடுத்து அவனை மேலும் மயங்கச்செய்வானாம். அந்த மீன்உணவினை சமைக்கும் பெண்டிர், இடித்தஅரிசியுடன், புளிகலந்த நீரில் உலைவைத்து, அதனுடன் சுறாவின் கொழுத்தகறியையும், வல்லாரைகீரை, பாகற்காய் கலந்து மீன்உணவினை சமைப்பாளாம். இன்றைய பிரியாணி போன்று இருக்குமோ?
Comments
Post a Comment