சங்ககால ப்ளேபாய்
- Get link
- X
- Other Apps
சங்ககால ப்ளேபாய்க்கு கொடுத்த தண்டனை:
கரும்பும், பூக்களும் நிறைந்த வயல்வெளி அதிகம் உடையது கள்ளூர் எனும் சிற்றூர். அவ்வூரிலுள்ள தலைவன் ஒருவன், தலைவியை மேல் காதல் கொண்டான். இருவரும் அக்கால வழக்கப்படி களவொழுக்கம் கொண்டு, காமம் தீர்த்து, தம் ஆசையை தீர்த்தனர். ஆசைதீர்ந்ததும், அவள்மேல் ஈர்ப்பு குறைந்தது அவனுக்கு, தன்னை திருமணம் செய்ய சொல்லி தலைவி வற்புறுத்த, அவளை யார் எனவே தெரியாது என சத்தியம் செய்தான். அக்கொடிய வழக்கு வழக்காடுமன்றம் சென்றது. இருவரின் உறவை விசாரிக்க ஆரம்பிக்க, அவ்விருவரும் ஒன்றாய் சுற்றியதை கண்ட ஊரார் சிலர் சாட்சியளித்தனர். அவனது குற்றம் உறுதியானது. அவனக்கு கொடூர தண்டனையளிக்க முடிவெடுத்தனர். ஊரின் மத்தியிலுள்ள பெருமரம் ஒன்றில் அவனை கட்டி வைத்தனர், சுண்ணாம்பு கலந்த நீரினை அவனது தலையிலிருந்து ஊற்றி நீராட்டினர். அவனுக்கு தண்டனை அளிக்கையில் ஊரார் அனைவரும் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.
இதனை கீழ்க்கண்ட அகநானூற்று பாடல் வாயிலாய் அறியலாம்.
பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில்
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப்
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர!
பொய்யால் அறிவென் நின் மாயம். அதுவே கையகப்பட்டமை அறியாய்,நெருநை
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து,
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத்
தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர்,
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன்''அறியேன்'' என்ற
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,
நீறு தலைப்பெய்த ஞான்றை,
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment