பேடியாடல்
- Get link
- X
- Other Apps
பேடியாடல்:
ஆடவர் பெண்வேடம் பூண்டு ஆடும் கூத்தினை "பேடியாடல்" என சங்க இலக்கியங்கள் கூறுகிறது. பாண்டரங்கம், துடியாடல், மல்லாடல், குடக்கூத்து, கொடுகோட்டி, பேடியாடல் எனும் ஆறுவகை ஆடல்கள் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. மாதவி ஆடிய பதினொருவகை கூத்துகளில் இதுவும் ஒன்று.
வாணாசுரன் எனும் அரக்கனின் மகள் உசை என்பவளின் கனவில் காமனின் மகன் அநிருத்தனை கண்டு காமுற்று, களவுக்காதல் தோன்ற, தன் தோழி சித்திரலேகையை வேண்டி அநிருத்தனை அடைந்தே தீருவது என உசை முடிவெடுத்தாள்.இவ்விஷயம் அரக்கவேந்தனுக்கு தெரியவர அநிருத்தனை சிறையிலடைத்தான். சிறையில் உசையும் அநிருத்தனும் காதல் வளர்த்தனர். அநிருத்தனை மீட்க காமனும், திருமாலும், அயிராணியும் வந்தனர். அயிராணி கடையமும், திருமால் குடக்கூத்தும், காமன் பேடியாட்டமும் ஆடி அரக்கனின் நகரில் நுழைந்ததாய் சிலம்பு கூறுகிறது.
காணொளி உதவி: Parthiba Raja sir
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment