ஒற்றன் குரல் எழுப்பும் காக்கை
- Get link
- X
- Other Apps
ஒற்றன் குரல் எழுப்பும் காக்கை:
"இனிப் பிறிதுண்டோ அஞ்சல் ஓம்பென
அணிக் கவின் வளர முயங்கி நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும்
குளித்துப் பொரு கயலிற் கண்பனி மல்க
ஐயவாக வெய்ய உயிரா
இரவும் எல்லையும் படரட வருந்தி
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்பத்
தம்மலதில்லா நம்மிவண் ஒழியப்
பொருள் புரிந்து அகன்றனராயினும் அருள் புரிந்து
வருவர் வாழி தோழி பெரிய
நிதியஞ்சொரிந்த நீவி போலப்
பாம்பூன் தேம்பும் வறங்கூர் கடத்திடை
நீங்கா வம்பலர் கணையிடத் தொலைந்தோர்
வசிபடு புண்ணின் குருதி மாந்தி
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல்
இல்வழிப் படூஉங் காக்கைக்
கல்லுயர் பிறங்கல் மலை இறந்தோரே".
அகநானூற்றின் பாடல் இது புகளூர் தமிழி கல்வெட்டில் இடம்பெற்ற "பெருங்கடுங்கோ" இயற்றிய பாடல் இது. இதில் அன்றைய காட்டுப்பாதையை அழகாய் வருணிக்கிறார். பாம்புகள் நெளியும் அந்த பாதையில் செல்வோரை அந்நிலகள்வர்கள் அம்பெய்து கொல்வர். அவ்வாறு இறந்தோரின் உடலிலிருந்து வழிந்து உறைந்து கிடக்கும் சதையினை இளம்ரத்தத்தோடு அங்குள்ள காக்கைககள் கூடிச்சென்று கொத்தி அருந்தும். இதனால் இயல்பாய் கரையக்கூடிய அதன் குரல்வளம் மாறுபட்டு, ஒற்றர்கள்போல் உள்ளடங்கிய குரலில் ஒலிக்கும் என பெருங்கடுங்கோ கூறுகிறார்.
சங்ககால ஒற்றரையும், காக்கையையும், கள்வரையும் ஒருங்கே இதில் காட்சிபடுத்துகிறார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment