புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

திருக்கார்த்திகை சில குறிப்புகள்

 திருகார்த்திகை சில குறிப்புகள்:


வானத்தில் மழை இல்லா "முழுநிலவு அறுமீன்" என போற்றப்பட்ட கார்த்திகை நட்சத்திரம் அன்று, நடுஇரவில் அன்றைய நம் தெருமுழுக்க அணிஅணியாய் விளக்குககள் ஏற்ப்பட்டு ஒளியூட்டப்பட்டன. அன்றைய பொழுது வீட்டு வாயிலிலும், வீதீகளிலும் அழகிய மாலைகள் தொங்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. இவ்விழாவே அன்றைய சங்ககால மக்களிடையே "கார்த்திகை பெருவிழா"வாய் கொண்டாடப்பட்டுள்ளது, இதனை கீழ்க்கண்ட அகநானூற்று பாடல் ஒன்று கூறுகிறது.


"மழை கால் நீங்கிய மாக விசும்பில்

குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,

அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;

மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,

பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய           

விழவு உடன் அயர,வருகதில் அம்ம"!


மா ஒளி சுற்றுதல்:


திருவண்ணாமலை, சேலம், சில தொண்டைமண்டல பகுதிகளில் மாஒளி சுற்றுதல் எனும் சடங்கு இன்றுவரை நடைபெறுகிறது.பனம்பூவைக் கருக்கித் தூளாக்கி துணியில் பொட்டலமாகக் துணியில் கட்டி வைத்துக்கொள்வார்கள். இப்பொட்டலத்தை பனைஓலை மட்டைகளின் நடுவே வைத்துக் கட்டிவிடுவார்கள். இதை நீண்ட கயிற்றில் கட்டிவைத்துக்கொண்டு நெருப்பை வைத்து விடுவார்கள். இப்போது கயிற்றைப் பிடித்து வேகமாக சுற்றுவார்கள். அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு சுற்றுவதற்குத் தகுந்தவாறு பல உருவங்களை ஏற்படுத்தும். அப்போது "மாவளியோ மாவளி" என்று சத்தமிடுவார்கள். இக்காட்சியினை பார்க்கையில்  மிகப்பெரும் ஒளிப்பிரவாகம் தோன்றி காண்பதற்கு ரம்மியமாய் இருக்கும். மாஓளி என்பதே மருவி "மாவ்ளி" என பின்னர் அழைக்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தில் கூட இக்காட்சியினை ஒருபாடலில் காட்டியிருப்பார்கள். ஆம்மரபு நீண்டகாலமாக வழக்கில் இருந்து வருவதை, 3000 வருடம் பழமையான பாறை ஓவியத்தில் காணப்படுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகுந்தம் பாறைஓவியத்தில் மாவளி சுற்றும் காட்சியைக் காணலாம்.


சொக்கப்பனை கொழுத்துதல்:


கார்த்திகை அன்று பனைமரத்தின் பெருங்கிளையை  வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன் வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றி பனை ஓலைகளைப் பிணைத்துக் கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக்கூம்பின் முன் ஸ்வாமி எழுந்தருள்வார். இதற்கு சொக்கப்பனையென பெயர், இம்மரபு தமிழகம் முழுக்க பரவலாய் காணப்படுகிறது. கொழுந்துவிட்டு எரியும் சோதியினை சிவமாய் கருதி வழிபடுவர். இதனை அடிமுடிகாணா அண்ணல் கதையெனப்படும் "இலிங்கோத்பவர்" வழிபாட்டுடன் இணைத்து பார்க்கப்படுகிறது, இப்புராணத்தை விரிவாய் காண


https://sculpturesofshiva.blogspot.com/2020/10/16.html?m=1


சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை மொத்தமாய் சேகரித்து வயல்களில் தூவினால் விளைச்சல் அமோகமாய் இருக்கும் என்பது நம்பிக்கை.


தீ குறித்த சில நம்பிக்கைகள்:


தீயிலிருந்து வெளியேறினால் அது புனிதம்  என்பது பழங்குடிகளின் நம்பிக்கை, இன்றைய தீ மிதி விழாக்களை அதற்கு சான்றாய் கூறலாம்( இராமயணத்தில் சீதையை தீயிலிருந்து வெளியே வந்து தம் புனிதத்தை நிரூபிக்க சொல்வது நோக்கத்தக்கது) திருவண்ணாமலை செத்தவரை பாறை ஓவியத்தில் கூட தீயிலிருந்து எருதினை வெளியேற்ற செய்யும் பெருங்கற்காலஓவியம் உண்டு இதனை மான் எனவும் கூறுவர். இன்றும் கூட புதிதாய் வீடுகட்டுகையில் வீட்டுவாசலில் வைக்கப்பட்ட திருஷ்டிபொம்மையை புதுமனைபுகுமுன் எரித்து அந்த சாம்பலை தூவும் வழக்கம் நம்மிடையே உள்ளது குறிப்பிடத்தக்கது.




திருமுறைகளில் கார்த்திகை விழா:


இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.


என அப்பர்பிரானும்,


"விளக்கைப் பிளந்து விளக்கினை யேற்றி

விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி

விளக்கில் விளக்கை விளக்கவல்லார்க்கு

விளக்குடையான் கழல் மேவலு மாமே"


என திருமூலரும் கூறுகிறார்.


இதுதவிர ஏகப்பட்ட குறிப்புகள் திருமுறைகளில் உண்டு.


கல்வெட்டில் கார்த்திகைவிழா:


ராஜராஜசோழனின் மேல்சேவூர் கல்வெட்டிலும், 

ராஜேந்திரசோழனின் திருக்காளத்தி கல்வெட்டில் ஒருவாரம் திருக்கார்த்திகை விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். இவைதவிர பல குறிப்புகள் உண்டு, கோவிலில் கார்த்திகை திருவிழாவை கவனிக்க, "கார்த்திகை கணத்தார்" என்ற ஒரு குழுவை அக்காலத்தில் ஏற்படுத்தியுள்ளனர்( South indian inscription volume 13 inscription no.303)


இனிய கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்

சுளுந்து (மா வளி) சுற்றுதல்





Comments

Popular posts from this blog

ஞாயிறு Special

சனிக்கிழமை சங்ககால அசைவ ஸ்பெஷல்

சங்ககால Variety சமையல்