புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக...

ஆநிரை இறைச்சி :

 ஆநிரை இறைச்சி :


சங்க இலக்கியத்தில் அசைவ உணவு குறித்து நிறைய குறிப்புகள் உள்ளது. அதில் மாட்டிறைச்சி குறித்த குறிப்புகளை காண்போம்.

நற்றிணை பாடல் ஒன்றில் புலையர்கள் ஆவுறித்து தின்றதை கூறுகிறது.

இதே கருத்தை நாவுக்கரசரும் தம் ஆறாம் திருமுறையில் கீழ்க்கண்டவாறு பாடுகிறார்,


"ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே"


கூத்து பாடல்களை பாடும் பாணன் இளம் கன்றின் கறியை உண்பான் என அகநானூறும், சிறுபாணாற்றுப்படையும் கூறுகிறது.


உழவர் கூட்டம் பசுவின் கறியை உண்டதை அகநானூற்றின் பாடல் கூறுகிறது.

இவர்கள் மட்டுமின்றி பார்ப்பனரான கபிலரும் மாட்டிறைச்சியை விரும்பி உண்டுள்ளார், இதனை புறநானூறு கூறுகிறது.


எனவே உணவு பழக்கவழக்கங்கள் காலத்திற்கேற்றவாறு மாறும் என்பதே திண்ணம்.



Comments

Popular posts from this blog

ஞாயிறு Special

சங்ககால Variety சமையல்

காமவேள் விழவு எனும் சங்ககால காதலர்தினம்