குமிட்டிபதி தேர் ஓவியம்:
- Get link
- X
- Other Apps
குமிட்டிபதி தேர் ஓவியம்:
கோவை மாவட்டம் வேலந்தாவளம் அருகேயுள்ள ஊர் குமிட்டிபதி, இப்பகுதியை சுற்றி யானை தொடர்பான பெயர்கள் கொண்ட ஊர்கள் அதிகம் உண்டு.
1. வேளம்=யானை தாவளம்=சந்தை (வேலந்தாவளம்)
2.மாவூத்தம்பதி
மாவூத்=பாகன் பதி=தங்குமிடம்
இன்னும் சில ஊர்களின் பெயரை ஆராய்ந்தால் யானைதொடர்பான பெயர்கள் கிடைக்கும்.
இங்குள்ள குமிட்டிபதி எனும் ஊரிலுள்ள குகைத்தளத்தில் வெண்சாந்து பூச்சுள்ள பாறை ஓவியங்கள் காணப்படுகிறது, இதில் தேர்போன்ற ஓர் உருவத்தினை சிலர் கயிறுகட்டி இழுப்பது போன்ற ஓவியம் காணப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் தேர்:
நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின்,
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே,
தொலையா நல்லிசை விளங்கு மலயன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கிழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே.
மலையமான் திருமுடிக்காரியை புகழ்ந்து பாடிய கபிலர் கள் உண்ட போதையில் தேர் அளிப்பது எளிது, ஆனால் தெளிவாக இருக்கும்போதே பலதேர்களை வழங்கியவன் காரி என அவன் புகழ் பாடுகிறார். சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் போர்க்களத்தில் பயண்படுத்திய தேர்கள் குறித்தே அதிகம் தகவல் கிடைக்கிறது. சங்கம் மருவிய இலக்கியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையிலேயே போர்தவிர்த்து இறைவன் உறையும் தேரும் அதை ஒட்டிய விழாக்களும் குறித்த குறிப்புகள் கிடைக்கிறது.து. மணிமேகலையில் பூம்புகாரில் இந்திரவிழா நடைபெற்றபோது ஆலமர் செல்வன் மகனுக்குத் தேர்த்திருவிழா நடைபெற்றதாய் குறிப்புள்ளது. தேவாரப்பதிகங்களில் அதன்பின்னர் குறிப்புகள் கிடைக்கிறது.
மூவாயிரம் வருடம் முந்தையதாய் குறிக்கப்படும் குமிட்டிபதி ஓவியத்தில் போர்கள் புரியும் தேர் அல்லாது, "தெய்வத்தேர்" குறித்த ஓவியம் காணப்படுவது சிறப்பானது. இந்த ஓவியத்தில் காட்டப்படும் தேரில் உறைவது எந்த இறைவன் என அறியமுடியவில்லை. மணிமேகலை கூறும் முருகனா அல்லது அப்பகுதி மக்களின் முன்னோரா? நடுகல் வீரனா? எவர் என வரைந்தவனுக்கே வெளிச்சம்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment