கோழியூர் எனும் உறையூர்
- Get link
- X
- Other Apps
கோழியூர் எனும் உறையூர்:
“முறம்போலும் செவியையுடைய யானையைச் சமரிடத்துக் கெடுத்த, புறத்தே சிறையையுடைய கோழி என்னும் நகரின் கண்ணே விருப்பத்
தொடு புக்காரூன்க"
என்ற சிலப்பதிகார பாடலின் வாயிலாய் உறையூரில் கோழி ஒன்று யானையை போரிட்டு வெற்றிகொண்டதனால் அவ்வூருக்குக் கோழியூர் என்று பெயர் ஏற்பட்டதென்று அறியலாம்.
“கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள்”
இதில் வரும் நெடும்பெருங்குன்றமே இன்றைய திருச்சி மலைக்கோட்டை. அக்காலத்தில் உறையூரே பெருநகரம். திருமுறைகண்ட கண்டராதித்த சோழனுக்கு கூட "கோழியூர்வேந்தன்" என பெயர் உண்டு.
கீழ்க்கண்ட படத்திலுள்ள சிற்பம் உறையூரின் புராதானமான பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் உள்ளது. இக்கோவில் முதலாம் ஆதித்தன் கால 9 ம் நூற்றாண்டு கற்றளி. 1927 ற்கு பின் நடந்த நகரத்தார் திருப்பணியில் இக்கோவில் புணரமைக்கப்பட்டதால் இக்கோவிலின் பழைய கட்டுமானம் காணாமல் போய்விட்டது. இப்போதுள்ள கோழிசிற்பம் பிற்காலத்தையது எனினும், அதற்கு முன்பே அங்கு சோழர்கால சிற்பம் இருந்திருக்க வேண்டும். உறையூர் நகரின் பண்டைய சிறப்பினை கருதி அங்கு சிலப்பதிகாரம் கூறும் கோழியூரின் பழம்பெரும் அடையாளத்தினை காட்ட சிலையை முன்னர் ஏற்படுத்தியிருப்பர், புணரமைப்பில் அதனை அகற்றி மீண்டும் அதேபோன்று ஒருசிலையை நகரத்தார் அங்கு ஏற்படுத்தியிருக்ககூடும். இதற்கு உதாரணமாய் திருவிசநல்லூர் ராஜராஜன், லோகமாதேவி சிலையை கூறலாம்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment