புறநானூற்றில் பேய்

சங்க இலக்கியத்தில் கரும்புஆலை:
கரும்பு விளைவித்தலும், அதனை சாறுபிழிந்து பருகியும், பின் அதனை பாகாய் காய்ச்சி வெல்லம் எடுப்பது தமிழர்களின் முதன்மைத்தொழிலாய் இருந்துள்ளது. பதிற்றுப்பத்தின் 75ம் பாடல் இதுகுறித்து சிறிது பேசுகிறது.
"வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப் பணிந்து,
நின் வழிப் படாஅர் ஆயின், நெல் மிக்கு,
அறை உறு கரும்பின் தீம் சேற்றுயாணர்"
கரும்புவளம் நிறைந்த சேற்றில் சிக்கிய வண்டிச்சக்கரத்தை, அந்தகரும்பினையே கட்டுகளாய் கட்டி சக்கரத்தினை மேடேற்றியதை அகநானூறு கூறுகிறது. இன்றைய கரும்புசாற்றினை பிழியும் இயந்திரத்தை போல அன்றும், கரும்பினை பிழிய ஒரு இயந்திரபொறி இருந்துள்ளது, கரும்புசாறை பிழியும்போது எழும்பும் ஒலி ஆண்யானை பிளிறுவதுபோல் இருக்கும் என்கிறது நற்றிணை. கரும்புச்சாற்றினை காய்ச்சி அதனிலிருந்து வெல்லம் எடுக்கும் ஓர் ஆலை இருந்ததும், அதிலிருந்து புகை வெளிவந்து மண்டி கிடந்ததையும் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. இப்பாடலில் "விசயம்" எனும் சொல் பயின்று வருகிறது. இது கருப்பச்சாறு அல்லது கட்டி என்ற பொருள் தருகிறது.
Comments
Post a Comment