புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

குறுந்தொகையில் புளிக்குழம்பு

குறுந்தொகையில் புளிக்குழம்பு:

சோற்றுக்குரிய சிறந்த குழம்பாக சங்ககாலத்திலேயே புளிக்குழம்பு இருந்துள்ளது. தலைவி தன் மெல்லிய விரலால் கட்டியான முற்றிய தயிரைப் பிசைந்து தன் குவளை மலர்போன்ற கண்களில் தாளிப்பு புகை கமழும்படி புளிக்குழம்பை தானே ஆக்கினாள் என கீழ்க்கண்ட குறுந்தொகை பாடல் கூறுகிறது, 

"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்துழந்து அட்ட தீம்பு வரிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே"

புளிப்பின் முற்றியசுவையில் உருவாகும், மெல்லிய இனிப்புடைய புளியம்பழத்தினை மோரில் கலந்து, அதனுடன் அவரை விதையை சேர்த்து கொதிக்க வைத்து அதில் செய்யும் குழம்பினை பற்றி மலைபடுகடாம் கூறுகிறது.இக்குழம்பினை மூங்கிலரிசி சோற்றில் பிசைந்து உண்டனர்.

புளிக்குழம்பை பிசைந்து தின்றுகொண்டு அந்த கடுப்பில் போட்ட பதிவு இது.

Comments

Popular posts from this blog

ஞாயிறு Special

சனிக்கிழமை சங்ககால அசைவ ஸ்பெஷல்

சங்ககால Variety சமையல்