புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

குறிஞ்சி நில உணவு முறை


#சங்க_இலக்கியங்களில் 
#தமிழர்_உணவு_முறைகள்

சங்க இலக்கியத்தில் Weekend :

வருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்
வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனி
னின்புளிக் கலந்து மாமோ ராகக் கழைவளர் நெல்லி னரியுலை யூழ்த்து
வழையமை சாரல் கமழத் துழைஇ
நறுமல ரணிந்த நாறிரு முச்சிக்
குறமக ளாக்கிய வாலவிழ் வல்சி
(கூத்தராற்றுப்படை175-183)

பெண்நாய் பிடித்த உடும்பின் இறைச்சியையும், விசையை வைத்து பிடித்த கடமானின் பசிய கொழுப்புடைய பன்றியோட தசையையும் உண்டு, அதன்பின் முற்றிய தேனால் செறிவூட்டப்பட்ட தெளிந்த கள்ளை மூங்கில் குழாயின் உள்ளேவிட்டு அருந்துங்கள்!  நெல்லாற் சமைத்த கள்(சுண்ட கஞ்சி?) உண்ணுவீராக! கடைசியாய் அருவியில் அடித்து வரப்பட்ட பலாவின் விதையின் மாவையும்,  புளியம்பழத்தையும் அளவாய் கலந்து,  மூங்கிலரிசியால் ஆகிய சோற்றையும் குறமகள் தருவாள் அதனையும் உண்பீராக!
என்று பத்துப்பாட்டில் ஒன்றான கூத்தராற்றுப்படை குறிஞ்சித்திணையின் உணவுபழக்கத்தில் ஒன்றினை பற்றி கூறுகிறது.

Happy weekend friends

Comments

Popular posts from this blog

சனிக்கிழமை சங்ககால அசைவ ஸ்பெஷல்

ஞாயிறு Special

சைவ ஸ்பெஷல்