மழவர் களவு
- Get link
- X
- Other Apps
மழவர் களவு:
பெருவழிகளில் பயணிக்கும் வணிகர்களை குறிவைத்து பாலைநில மழவர்கள் வளைந்த வில்லையும், அம்பையும் கொண்டு வழிப்பறி நிகழ்த்தினர். மழவர்களின் இச்செயலை கண்டு அஞ்சி மற்றகுடியினர் ஊரை காலி செய்வர். வனவிலங்குகள் அதிகம் உலவும் பீர்க்கங்காய் கொடி படரும். ஆட்கள் இல்லாததால் செங்கலினால் கட்டப்பட்ட வீடும், கோவிலும், முருங்கைகீரையை உண்டு வாழும் யானை தன் பிடரியை தேய்ப்பதால் அழிந்துபடுகிறது என அகநானூறு பாடல் ஒன்று கூறுகிறது.
மழவர்களின் வழிப்பறியினால் இறந்துபடும் வழிப்போக்கர்களின் நினைவாய் கற்குவியலை ஏற்ப்படுத்தி வணங்கினர். அதில் மல்லிகை கொடி படர்ந்ததாய் மற்றொரு அகநானூற்று பாடல் கூறுகிறது. கீழே படத்தில் காணப்படும் இரும்புகால சின்னத்தை "உயர்பதுக்கை" என இலக்கியங்கள் கூறுகியது. அக்காலத்தில் இப்பதுக்கைகள் சுற்றுச்சுவருடன் பிரம்மாண்டமாய் இருக்கும். இதில் மழவர்கள் ஒழிந்துகொண்டு ஆநிரையை கவர்ந்துள்ளனர். இம்மழவர் குடியினர் சிந்துசமவெளியிலிருந்து தென்னகம் நோக்கி நகர்ந்ததாய் "Walking with the unicorn" எனும் ஆராய்ச்சி கட்டுரையில் ஆய்வறிஞர்.திரு.ஐராவதம் மகாதேவனும், jonathan mark kenoyer எனும் அறிஞரும் குறிப்பிட்டுள்ளனர்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment