Posts

Showing posts from May, 2021

புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

புள்ளின நிமித்தங்கள்

Image
  புள்ளின நிமித்தங்கள்: நம் சங்கஇலக்கிய நூல்கள் வாயிலாய் பண்டைய தமிழர்களின் நம்பிக்கை சார்ந்த சில விஷயங்களை அறியமுடிகிறது. அதில் ஒன்றுதான் நிமித்தம்(சகுனம்) பார்ப்பது, அப்பழக்கம் இன்றுவரை தொடர்ந்து வருவதை அறியலாம். பின்வரும் தீதினை அரசுக்கு முன்னரே தெரிவிக்கும் "நிமித்தகர்" அரசவையில் கூட உண்டு. அத்தகைய நிமித்தங்களில் "புள்" நிமித்தமும் ஒன்று. புள்ளினம் என்றால் பறவையினம் என்கிறது தொல்காப்பியம். "பொன் உலகு ஆளீரோ?புவனி முழுது ஆளீரோ?நல் நலப் புள்ளினங்காள்" என்ற ஆழ்வார் பாசுரம் வாயிலாகவும் புள்ளினங்கள் குறித்து அறியலாம். சங்கஇலக்கியத்தால் புள்நிமித்தம் குறித்து நிறைய தரவுகள் கிடைக்கிறது. சோழன் நலங்கிள்ளியின் வீரர்கள் பறவைகளின் சகுனம் தீயதாய் இருப்பினும், யாம் போருக்கு செல்வோம் என்கின்றனர். இதன்வாயிலாய் போருக்கு செல்லும் முன் புள்சகுனம் பார்த்ததை அறியலாம். இதுபோன்ற நிறைய உதாரணங்கள் சங்க இலக்கியத்தில் உண்டு. பஞ்சபட்சி சாஸ்திரம் என்ற பிற்கால ஜோதிடநூல் கூட நம்மிடையே வழக்கில் இன்றும் உண்டு. கடையேழு வள்ளலில் ஒருவனான மலையமான் திருமுடிகாரியை புகழும் கபிலர், பறவைசகுனம்

சங்க இலக்கியத்தில் கரும்புஆலை:

Image
  சங்க இலக்கியத்தில் கரும்புஆலை : கரும்பு விளைவித்தலும், அதனை சாறுபிழிந்து பருகியும், பின் அதனை பாகாய் காய்ச்சி வெல்லம் எடுப்பது தமிழர்களின் முதன்மைத்தொழிலாய் இருந்துள்ளது. பதிற்றுப்பத்தின் 75ம் பாடல் இதுகுறித்து சிறிது பேசுகிறது. "வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப் பணிந்து,  நின் வழிப் படாஅர் ஆயின், நெல் மிக்கு,  அறை உறு கரும்பின் தீம் சேற்றுயாணர்" கரும்புவளம் நிறைந்த சேற்றில் சிக்கிய வண்டிச்சக்கரத்தை, அந்தகரும்பினையே கட்டுகளாய் கட்டி சக்கரத்தினை மேடேற்றியதை அகநானூறு கூறுகிறது. இன்றைய கரும்புசாற்றினை பிழியும் இயந்திரத்தை போல அன்றும், கரும்பினை பிழிய ஒரு இயந்திரபொறி இருந்துள்ளது, கரும்புசாறை பிழியும்போது எழும்பும் ஒலி ஆண்யானை பிளிறுவதுபோல் இருக்கும் என்கிறது நற்றிணை. கரும்புச்சாற்றினை காய்ச்சி அதனிலிருந்து வெல்லம் எடுக்கும் ஓர் ஆலை இருந்ததும், அதிலிருந்து புகை வெளிவந்து மண்டி கிடந்ததையும் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. இப்பாடலில் "விசயம்" எனும் சொல் பயின்று வருகிறது. இது கருப்பச்சாறு அல்லது கட்டி என்ற பொருள் தருகிறது.

சங்ககால Variety சமையல்

Image
  சங்ககால Variety சமையல்: வேளைப்பூ மிதவை: வேளைக்கீரை என்பது சித்தமருத்துவத்தில் வாதநோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.  அக்கீரையை சிறிது முற்ற விட்டால் கிடைக்கும் வேளைப்பூ, சிறு குழந்தைகளின் வயிற்றுப்போக்கை சரிசெய்ய உதவும், அத்தகைய மருத்துவ குணமுடைய வேளைப்பூவினை,ஆயர்மகள் கொய்து அதனுடன் கெட்டித்தயிரை கலந்து, நன்றாய் கரைத்து அதனை உண்டதாய் புறநானூறு கூறுகிறது "வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ, ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை அவரை கொய்யுநர் ஆர மாந்தும்" குறும்பூழ் குழம்பு: தனக்கு நல்ல செய்தி அறிவித்த ஏவலனுக்கு,நெய்ஊறிய குறும்பூழ் சம்பாரத்தோடு கூடிய கறியுடன் சேர்த்த சோற்றினை பெருவாய் என தலைவி வாழ்த்தினால், குறும்பூழ் என்பது காடை ஆகும். காடையை பிடிக்க கண்ணி கட்டுவது இன்றும் கிராமங்களில் வழமை. காடைக்கு கண்ணி கட்டுவது என்பது சாதாரணமானதல்ல, சிறு சப்தமோ அல்லது கண்ணிவைப்பது தெரிந்தாலே அங்கு காடை இருப்பிடத்தை காலிசெய்துவிடும், குறுந்தொகை குறும்பூழ் உணவை பற்றி கூறுகிறது. கல்யாண மோர்க்குழம்பு: பிறந்தகத்தில் செல்லமாய் வளர்ந்த பெண், திருமணம் முடித்து தம்காதல் கனவனுக்காய் ஆசையாய் புளிப்பும் இனிப்