Posts

புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக...

சைவ ஸ்பெஷல்

Image
  சைவ ஸ்பெஷல்: அம்புளி சோறு: குழைய குழைய வேகவைத்த அரிசியுடன், வேளைப்பூவை போல தோற்றமளிக்கும் வெண்மையான கெட்டித்தயிர் கலந்து, கூழ்மாதிரி அரைத்து உண்ணும் உணவை, அக்காலத்தில் "அம்புளி சோறு" என அழைத்தனர். அதற்கு வெஞ்சனமாய்(Side dish) வேளைக்கீரையை கூட்டு வைத்து உண்டனர்.இதனை, "கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் தாதொரு மறுகின் போதொடு பொதுளிய வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ, ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை" எனும் புறநானூற்றின் பாடல் ஒன்றின் வாயிலாய் அறிய முடிகிறது. இதனை சங்ககால சோழனான கோப்பெருஞ்சோழன் தன் நண்பனான பிசிராந்தையார் பற்றி பாடும்பொழுது அவர் இருப்பிடமான பொதிகைமலையில் வாழ்ந்த மக்களின் உணவாக "அம்புளி சோறு" பற்றி சிலாகித்து பாடுகிறார். பாலுடை அடிசில்: அரிசியை தண்ணீரில் கலந்து தண்ணீரில் வேகவைத்து வடிப்பதுபோல், அக்கால தமிழர்கள் பாலினை கொதிக்க வைத்து, அதனுள் அரிசியினை களைந்து, வேகவைத்து அதனை வடித்து உண்டுள்னர். இதற்கு "பாலுடை அடிசில்" எனப்பெயர். திருமணம் முடிந்து வந்த புதுமகள், தான் புகுந்த வீட்டில் இச்சோற்றினை வடித்ததாக அகநானூறு கூறுகிறது. "விழவுடன் அய...

ஞாயிறு Special

Image
 ஞாயிறு Special : புரட்டாசியாவது,ஐப்பசியாவது! சங்ககாலத்தில் இப்படி யாரும் நோன்பு நோற்றதில்லை, இன்று பெரும்பாலும் வைணவக்குடும்பங்களில் புரட்டாசி நோன்பு இருப்பது வாடிக்கை, அவர்களை பார்த்து சைவக்குடும்பங்களிலும்(சிவமதம்) விரதமிருந்து தூய்மையை பின்பற்றி வருவது அதிகரித்து வருகிறது!  ஞாயிறு சிறப்பு பதிவாக, சங்ககாலத்தில் எப்படி விதவிதமாய் அசைவ உணவை உண்டனர் என காண்போம். சுட்டகறி(Barbeque) : தன்னிடம் பாடல்பாடி தமிழை வளர்த்த புலவர்களை கரிகால் பெருவளத்தான் பரிசிலை வாரிவழங்கியது மட்டுமல்லாமல், அசைவ உணவை வழங்கி அவர்கள் வயிற்றையும் நிரப்பியுள்ளார். கொழுத்தசெம்மறி ஆட்டின் இறைச்சியை இரும்புகம்பியில் கோர்த்து சுட்டு வற்புறுத்தி உண்ண கொடுத்துள்ளான். இறைச்சியின் சூட்டினை தணிக்க தம் வாயின் இருபக்கமும் ஊதி, அவற்றின் வெம்மையை தணித்து புலவர்கள் உண்டுள்ளனர். பற்களின் முனை மழுங்கும் அளவிற்கு சுடச்சுட விருந்தளித்துள்ளார் செம்பியற்கோ. இதனை  "காழில் சுட்ட கோல்ஊன் கொழும்குறை ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி" என்ற பொருநராற்றுப்படை பாடல் கூறுகிறது. செம்மறியாடு மட்டுமின்றி மீன், முயல், உடும்பு, கோழி, பன்றி ...

சங்க இலக்கியத்தில் நெய்தல்

Image
  சங்க இலக்கியத்தில் நெய்தல்: "வருணன் மேய பெருமணல் உலகம்" ஐந்து திணைகளில் ஒன்றான நெய்தல் நிலத்தினை குறிக்கும் தொல்காப்பிய அகத்திணை பாடல்இது.கடற்கரை பெருமணல் பரப்பாய் இருந்ததனால் இவ்வாறு குறித்தனர். மேலும் புறநானூறு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலையில் கடல்நிலம் தொடர்பாய் எண்ணற்ற பாடல்கள் உள்ளது. இந்நில மக்களை நுளையர், பரதவர் என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. நெய்தல்நில தலைவனை குறிக்க துறையவன், சேர்ப்பன், புலம்பன், கொண்கன் என அழைத்தனர். பட்டினப்பாலை "புல்தலை இரும்பரதவர்" என இவர்களை அழைக்கிறது! தலையில் கடல்நீர் பட்டு அவர்கள் முடி பழுப்பேறிவிட்டது என்பது கருத்து. கடல்தொழில் புரிவதற்கு தமதுபடகில் சென்று உறுதியான புரிகளை உடைய கயிற்றின் முனையில் உறுதியான. இரும்புஉளியை இறுக்கமாய் பிடித்து, பெரியமீனை கண்டதும், வேகமாய் எறிந்து மீனை பிடிப்பர், கலங்காத மனம் கொண்டு இரவிலும் மீன்பிடிக்க செல்வர். அந்த மீனை அதிகாலையில் கரைக்கு இழுத்து வந்து குவித்து, உறவினருக்கும் நண்பர்களுக்கும் பிரித்தளித்து, நண்பர்கள் புடைசூழ தேன்சுவையுள்ள கள் அருந்தி மகிழ்வர். " கயிறுகடை யாத்த கடுநடை எறிஉளித...

புனல்நீர் விழா

Image
புனல்நீர் விழா: நிலையான, அதேசமயம் பெரும்பிரவாகமாய் தோன்றி அடிக்கடி ஊரை அழிக்காத ஒரு ஆற்றங்கரையில் தான் நிலையான குடியிருப்பு தோன்றும், விவசாயம் பெருகும், நாகரீகம் செழிக்கும். அவ்வாறு இயற்கை நமக்களித்த கொடைதான் நம் காவிரி. அந்த காவிரியும் அடிக்கடி தன்போக்கை மாற்றி தம் குடியினரை அழித்த வரலாறு சங்கஇலக்கியத்திலும் உள்ளது. அப்போது வந்தான் ஒரு நாயகன் 2000 வருடம் கடந்தும் இன்றும் நாம் நினைவில் வைத்து போற்றக்கூடிய தலைவன். அவனாலே இன்று கரைபலப்படுத்தப்பட்டு கடலென வந்த காவிரியை தடுத்து பிரித்து திசைமாற்றி இன்றுவரை எத்துணையோ குடும்பம் செழிக்க காரணமானான், அவன் யாரென நமக்கு சொல்லிதெரிய வேண்டியதில்லை. சின்னபிள்ளையும் அவன்புகழ் பாடும். அவன் கட்டிய அணையின் தொழில்நுட்பத்தை புகழ்ந்து வியந்த வெள்ளைக்காரன் 'Grand anaikut' எனபெயரிட்டு அழைத்தான்.  காவிரியின் பெருமை : "வசையில் புகழ்வயங்கு வெண்மீன், திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய களியுணவின், புட்டேம்பப் புயன்மாறி வான் பொய்யினும் தான் பொய்யா, மலைத்தலை இய கடற்காவிரி" என பட்டினப்பாலை காவிரியை வெள்ளி விண்மீனுக்கு ஒப்புமை கூறி, அக்கோளைப்போல் த...

மெல்லடை

Image
மெல்லடை : மதுரை நகரத்திற்கு தூங்காநகரம் என பெயர் உண்டு. நள்ளிரவு, அதிகாலை என எப்போது சென்றாலும் உணவு உண்ண கடைதிறந்திருக்கும். பசியால் வாடுவோர் அங்கே காணமுடியாது. இவ்வழக்கம் இன்றுமட்டுமல்ல. ஈராயிரம் ஆண்டுகள் முன்பே மதுரை அவ்வாறே இருந்ததென மதுரைக்காஞ்சி கூறுகிறது. "நல்வரி இறாஅல் புரையும் மெல்லடை அயிர் உருப்பு உற்ற ஆடமை விசயம் கவவொடு பிடித்த வகையமை மோதகம் தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க " இரண்டாம் சாமத்தில் அரிசிமாவில் வெல்லம் கலந்து செய்த இனிப்பு அடை, மோதகம் விற்கும் வணிகர் பற்றிய தகவலுடன், இரவு நேரத்தில் மதுரை நகரில் உண்பதற்குப் பல சிற்றுண்டிக் கடைகள் இருந்தன என இப்பாடல் மூலம்அறிய முடிகின்றது. இக்கால இனிப்பு தோசை போன்ற உணவே அது, முதன்முதலாய் இதற்கு தோசை என பெயர்வைத்த பெருமை கிருஷ்ணதேவராயரையே சேரும், காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் தோசை குறித்த கல்வெட்டு கிடைக்கிறது.தோசைக்கு அரிசி, உளுந்து, எண்ணெய் நிவந்தமாய் கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. மேலும் அச்சுதராயர் கல்வெட்டும் தோசை குறித்த தகவலை தருகிறது. இக்கல்வெட்டுகள் வைணவக் கோவில்களில் ஸ்ரீராமநவமியில் நைய்வேத்யம் அளிக்கப்...

பறம்புமலை

Image
பறம்புமலை : கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடைய இம்மலை, சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநலக்குன்றம் எனவும் இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது.  " ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும் " என்று கபிலர் பாடல் குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது. பறம்பு மலையின் வளம்: ( அளிதோ தானே, பாரியது பறம்பே; நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும் உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே; ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே; இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே; மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே; நான்கே, அணிநிற ஒரி பாய்தலின் மீதுஅழிந்து திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே. வான்கண் அற்றுஅவன் மலையே; வானத்து மீன்கண் அற்றுஅதன் சுனையே; ஆங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் தாளிற் கொள்ளலிர்; வாளிற் றாரலன்; யான்அறி குவன்அது கொள்ளு மாறே; சுகிர்புரி நரம்பின்...

ஆமைக்கறி

Image
ஆமைக்கறி : முந்நீர்நிலைகள் அனைத்திலும் வாழும் உயிரிகள் ஆமைகளாகும். சமீபகாலமாய் இந்த "ஆமைகறி" கதைகள் சமூக வலைதளங்களில் பிரசித்தம். சங்க இலக்கியத்தில் ஆமையை வறுத்து மெயின் டிஷ்ஷாக படைத்து, அதன் முட்டையை வெஞ்சனமாக்கி ஷைட் டிஷ்ஷாக விருந்தினருக்கு உபசரித்துள்ளனர்.  வயலில் உழவர்கள் உழும் பொழுது, உழுபடையால் சிக்கி இறக்கும் ஆமைகளின் சதைகள் குவித்து வைத்த உயரம் மிக அதிகமாய் இருக்கும், விருந்தினருக்கு இதை சமைத்தும் கொடுத்துள்ளனர். புறநானூற்றில் இடைக்காடனார் இதனை, " உழவர் படைமிளிர்ந் திட்ட யாமையும் வன்புல கேளிர்க்கு வருவிருந் தயரும்" ஆமையின் முட்டையை உண்டதை  "யாமையின் புலவு நூறு முட்டையைத் தேனா றாம்பல் கிழங்குடன் பெறூஉம்" என நன்னாகனார் கூறுகிறார்.