Posts

Showing posts from July, 2020

புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

மெல்லடை

Image
மெல்லடை : மதுரை நகரத்திற்கு தூங்காநகரம் என பெயர் உண்டு. நள்ளிரவு, அதிகாலை என எப்போது சென்றாலும் உணவு உண்ண கடைதிறந்திருக்கும். பசியால் வாடுவோர் அங்கே காணமுடியாது. இவ்வழக்கம் இன்றுமட்டுமல்ல. ஈராயிரம் ஆண்டுகள் முன்பே மதுரை அவ்வாறே இருந்ததென மதுரைக்காஞ்சி கூறுகிறது. "நல்வரி இறாஅல் புரையும் மெல்லடை அயிர் உருப்பு உற்ற ஆடமை விசயம் கவவொடு பிடித்த வகையமை மோதகம் தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க " இரண்டாம் சாமத்தில் அரிசிமாவில் வெல்லம் கலந்து செய்த இனிப்பு அடை, மோதகம் விற்கும் வணிகர் பற்றிய தகவலுடன், இரவு நேரத்தில் மதுரை நகரில் உண்பதற்குப் பல சிற்றுண்டிக் கடைகள் இருந்தன என இப்பாடல் மூலம்அறிய முடிகின்றது. இக்கால இனிப்பு தோசை போன்ற உணவே அது, முதன்முதலாய் இதற்கு தோசை என பெயர்வைத்த பெருமை கிருஷ்ணதேவராயரையே சேரும், காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் தோசை குறித்த கல்வெட்டு கிடைக்கிறது.தோசைக்கு அரிசி, உளுந்து, எண்ணெய் நிவந்தமாய் கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. மேலும் அச்சுதராயர் கல்வெட்டும் தோசை குறித்த தகவலை தருகிறது. இக்கல்வெட்டுகள் வைணவக் கோவில்களில் ஸ்ரீராமநவமியில் நைய்வேத்யம் அளிக்கப்

பறம்புமலை

Image
பறம்புமலை : கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடைய இம்மலை, சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநலக்குன்றம் எனவும் இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது.  " ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும் " என்று கபிலர் பாடல் குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது. பறம்பு மலையின் வளம்: ( அளிதோ தானே, பாரியது பறம்பே; நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும் உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே; ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே; இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே; மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே; நான்கே, அணிநிற ஒரி பாய்தலின் மீதுஅழிந்து திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே. வான்கண் அற்றுஅவன் மலையே; வானத்து மீன்கண் அற்றுஅதன் சுனையே; ஆங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் தாளிற் கொள்ளலிர்; வாளிற் றாரலன்; யான்அறி குவன்அது கொள்ளு மாறே; சுகிர்புரி நரம்பின்

ஆமைக்கறி

Image
ஆமைக்கறி : முந்நீர்நிலைகள் அனைத்திலும் வாழும் உயிரிகள் ஆமைகளாகும். சமீபகாலமாய் இந்த "ஆமைகறி" கதைகள் சமூக வலைதளங்களில் பிரசித்தம். சங்க இலக்கியத்தில் ஆமையை வறுத்து மெயின் டிஷ்ஷாக படைத்து, அதன் முட்டையை வெஞ்சனமாக்கி ஷைட் டிஷ்ஷாக விருந்தினருக்கு உபசரித்துள்ளனர்.  வயலில் உழவர்கள் உழும் பொழுது, உழுபடையால் சிக்கி இறக்கும் ஆமைகளின் சதைகள் குவித்து வைத்த உயரம் மிக அதிகமாய் இருக்கும், விருந்தினருக்கு இதை சமைத்தும் கொடுத்துள்ளனர். புறநானூற்றில் இடைக்காடனார் இதனை, " உழவர் படைமிளிர்ந் திட்ட யாமையும் வன்புல கேளிர்க்கு வருவிருந் தயரும்" ஆமையின் முட்டையை உண்டதை  "யாமையின் புலவு நூறு முட்டையைத் தேனா றாம்பல் கிழங்குடன் பெறூஉம்" என நன்னாகனார் கூறுகிறார்.

குறுந்தொகையில் புளிக்குழம்பு

Image
குறுந்தொகையில் புளிக்குழம்பு: சோற்றுக்குரிய சிறந்த குழம்பாக சங்ககாலத்திலேயே புளிக்குழம்பு இருந்துள்ளது. தலைவி தன் மெல்லிய விரலால் கட்டியான முற்றிய தயிரைப் பிசைந்து தன் குவளை மலர்போன்ற கண்களில் தாளிப்பு புகை கமழும்படி புளிக்குழம்பை தானே ஆக்கினாள் என கீழ்க்கண்ட குறுந்தொகை பாடல் கூறுகிறது,  " முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்துழந்து அட்ட தீம்பு வரிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே " புளிப்பின் முற்றியசுவையில் உருவாகும், மெல்லிய இனிப்புடைய புளியம்பழத்தினை மோரில் கலந்து, அதனுடன் அவரை விதையை சேர்த்து கொதிக்க வைத்து அதில் செய்யும் குழம்பினை பற்றி மலைபடுகடாம் கூறுகிறது.இக்குழம்பினை மூங்கிலரிசி சோற்றில் பிசைந்து உண்டனர். புளிக்குழம்பை பிசைந்து தின்றுகொண்டு அந்த கடுப்பில் போட்ட பதிவு இது.

சங்ககால மீன்உணவு

Image
சங்ககால மீன்உணவு : நழுவி ஓடும் வரால் மீனை, அதன்போக்கில் அலைந்து பிடித்து இரண்டுபகல், இரண்டு இரவு இனிமை பிறக்கும்படி புளிக்கவைத்து, அதன்பின் அதனை வெண்ணீரில் வேகவைத்து, இன்றைய சூப் போன்ற உணவை தருவர் அதற்கு நொறுக்குதீனியாக தொட்டுக்கொள்ள சுட்டுவாட்டிய மீனை விருந்தினருக்கு தந்து உபசரித்து மகிழ்ந்தனர். ( வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த  வெந்நீர ரரியல் விரலலை நறும்பிழி தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் ) சிறிய வடிவ ஆரல்மீன் நன்னீரில் வாழும் வகை. கள்ளை உண்ட மயக்கத்தில் மக்கள் ஆரல் மீனை சுட்டு தின்றதை புறநானூறு கூறுகிறது. (..... காமம் வீடவாரா ஆரற் கொழுஞ்சு டங்கவு டாஅ" ) தற்போது இறால் என நாம் கூறும் உணவை அன்று இரவுமீன் என அழைத்தனர். இதனை பொறித்து தின்றனர், மேலும் தீயினில் வாட்டி சுட்டும் உண்டனர். ( கலிமாக்கள் கடலிறவின் சூடு தின்றும்) கடலில் ஏகப்பட்ட மீனினங்கள் இருந்தாலும் சுறாமீன் பற்றிய குறிப்பே அதிகம். கொம்புசுறா, பால்சுறா, பேய்ச்சுறா, வேளாச்சுறா, குரங்கன்சுறா, செஞ்சுறா என இதில் லவகையுண்டு. மிகமனச்சுரம் கொண்ட பரதவர்களின் உறுதியான வலையை பிய்த்தெறிந்து அவர்களையே நடுங்கச்செய்யும் குண

சங்க இலக்கியத்தில் சிற்றுண்டி

Image
சங்க இலக்கியத்தில் Snacks : "ஆற்றுக்குள் இறங்கி அரகரா என்றாலும் சோற்றுக்குள் இருக்கிறான் சொக்கநாதன்" இன்றும் நம் வீடுகளில் பரவலாய் காணப்படும் உணவு உளுந்தங்களி, பூப்பெய்த பெண்கள், மாதவிடாய் நாளில் உள்ள பெண்களுக்கு வீட்டில் உளுந்தங்கஞ்சி, உளுந்துகளி கொடுப்பர். அகநானூறு பாடல் ஒன்று இந்த உளுந்துஉணவைப்பற்றி கூறுகிறது. " உளுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை " என பாடுகிறது. இதில் வரும் மிதவை என்பது சோறு ஆகும். பழைய சோற்றில் நீர்கலந்து, அதில் கெட்டித்தயிரை விட்டு கலக்கி உண்ணும் "நீராகாரம்" உணவை பிங்கல நிகண்டு மோழை, சுவாகு, கஞ்சிக்குகாடி என கூறுகிறது. அவித்தபயிருடன் நாட்டுச்சக்கரை கலந்து உண்ணும் உணவினை, பெரும்பாணாற்றுப்படை "கும்மாயம்" என்கிறது. மணிமேகலை இதனை " பயிற்றுத்தன்மை கெடாது கும்மாயமியற்றி " என்கிறது. இந்த கும்மாயஉணவு நிறைய கல்வெட்டுகளில் பயின்று வருகிறது! பாலோடு மாவு கலந்து அதனை வட்டவடிவில் உருட்டி அதனை நல்லெண்ணெயில் பொரித்து அப்பம் செய்து உண்டதை தீஞ்சோறு என மதுரைக்காஞ்சி கூறுகிறது.  காராம்பசுவின் பாலில் வெள்ளப்பாகு கலந்து சுடச்சுட குடித்

விருந்து உணவு

Image
செல்வந்தர் உணவு: இரண்டாயிரம் வருடம் முன்பு செல்வந்தர் வீட்டில் எப்படி உணவு உண்டனர் என சில சங்க இலக்கிய பாடல்கள் கூறுகிறது! அவற்றை காண்போம். " சோறுவாக்கிய கொழுங்கஞ்சி யாறுபோல பரந்தொழுகு" செல்வந்தர் வீட்டில் வடித்தஅரிசியின் கஞ்சி ஆற்றைப்போல பரந்தோடியது என பட்டினப்பாலை கூறுகிறது. அந்த அளவிற்கு அவர்கள் வீட்டில் சோறுபொங்கி வறியோருக்கும் சுற்றத்தாருக்கும் உணவளித்து மகிழ்ந்தனர். குறுகிய கால்களை உடைய பன்றியை சிறுசிறுதுண்டாக நறுக்கி அதை நெய்யில் பொறித்தனர். இறைச்சி வறுபடும் இந்த ஏகாந்த இசையை கேட்டு யானைகள் மயங்கின என புறநானூறு ஒருபாடலில் கூறுகிறது! மன்னர்களின் வாழ்க்கை இன்னும் ஏகபோகம், மங்கையர் தங்ககலத்தில் கள் ஊற்றிக்கொடுத்தனர், அதனை மன்னன் உண்டு மகிழ்ந்ததை, " ஒன்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய " எனும் புறநானூற்றின் மற்றொரு பாடல் விளக்குகிறது. மேலும் அமிழ்தத்தைபோல சுவையுடைய அடிசிலை(பொங்கல் போன்ற உணவு) வெள்ளிக்கிண்ணத்தில் உண்டு மகிழ்ந்தனர். அருகம்புல்லை மட்டும் தின்று வளர்ந்து கொழுத்த இளம் செம்மறிகிடாயை வெட்டி, அதனை இரும்பு அலகால் குத்தி அதனை வாட்டி உண்டனர்( இன்றைய Barbeque போ

பழிவாங்குதல் ஒரு சுகானுபவம்

Image
பழிவாங்குதல் ஒரு சுகானுபவம் : பலஇனக்குழுக்களால் உருவான நம் தமிழினத்தில் கோசர்கள் என்ற ஓர் மரபினரும் உளர். அகுதி, திதியன், குறும்பியன், ஆதனெழினி, தழும்பன் முதலியோர் கோசர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். முதுகோசர், இளம் கோசர், நான்மொழிக் கோசர், வாய்மொழிக் கோசர், செம்மற் கோசர்,நீள்மொழிக் கோசர், ஒன்றுமொழிக் கோசர் என கோசர்கள் புலவர்களால் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களின் பூர்வீகம் துளு மற்றும் கொங்குதேசம் என கருதப்படுகிறது! நியமத்தில் சிலர் இருந்ததும் தெரியவருகிறது.  கோசர்களின் வஞ்சினம் : சங்கபாடல் வாயிலாக நன்னன் என்ற பெயரில் பல வேளிர் இருந்ததை அறியலாம். அதில் கொங்கு பகுதியையாண்ட நன்னன் என்ற ஒருவன் இருந்துள்ளான். அக்காலத்தில் தம் வீரத்திற்கு அடையாளமாகவும், பகை மன்னர்களிடம் மானம் பாராட்டவும் அடையாளமாய் காவல்மரத்தை(ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு மரம்) போற்றி பாதுகாத்துவந்துள்ளனர். இதில் நன்னனின் காவல்மரமான மாமரத்திலிருந்து கோசர்குடியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருத்தி தன் மசக்கை ஆசையால் நன்னனின் காவல்மரத்திலிருந்த மாங்கனியை தின்ன, பெருங்கோவம் அடைகிறான் நன்னன், இத்துணைக்கும் கோசரும், நன்னரும் பகைகுடியின

முல்லைநில உணவு முறை

Image
#சங்க_இலக்கியங்களில்  #தமிழர்_உணவு_முறைகள் இன்றைய நாட்களில் செவ்வாய், வெள்ளி பொதுவாக அசைவம் சாப்பிடுவதில்லை. சில வீடுகளில் வியாழன், சனியும் இந்த லிஸ்டில் சேரும். இடையிலுள்ள நாட்களில் பிரதோஷம், அம்மாவாசை, சஷ்டி இன்னும் வேறுசில விஷேசம் வந்தால் அதுவும் கோவிந்தா. இது இந்து மதத்தை பின்பற்றுவர்களுக்கு மட்டும், இந்து மதத்திலேயே சைவர், நனிசைவர் உண்டு. நல்லா இளம் வெள்ளாட்டுகரிய படைச்சிட்டு இருந்த வேலனையும் இப்ப சைவமாக்கியாச்சி! ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் பாரபட்சம் பார்க்காமல் அசைவம் விரும்பி உண்ணும் ஆட்கள் அதிகம். ஆகவே ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் சங்க இலக்கிய போஸ்ட் இது. முல்லைநில கோவலர் பகுதிகளில் முயல்கள், மான்கள், வான்கோழிகள் அதிகம் உண்டு! அவற்றை கொன்று அந்த ஊன்சோற்றை உண்பர்.மேலும் பொன்னை நறுக்கியதுபோல ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி பதம்பார்த்து ஆக்கிய சோற்றை உண்டனர்(பிரியாணி?) ‘ நள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப் புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ் உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ நாள்மோர் மாலும்......."

குறிஞ்சி நில உணவு முறை

Image
#சங்க_இலக்கியங்களில்  #தமிழர்_உணவு_முறைகள் சங்க இலக்கியத்தில் Weekend : வருவி தந்த பழஞ்சிதை வெண்காழ் வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனி னின்புளிக் கலந்து மாமோ ராகக் கழைவளர் நெல்லி னரியுலை யூழ்த்து வழையமை சாரல் கமழத் துழைஇ நறுமல ரணிந்த நாறிரு முச்சிக் குறமக ளாக்கிய வாலவிழ் வல்சி (கூத்தராற்றுப்படை175-183) பெண்நாய் பிடித்த உடும்பின் இறைச்சியையும், விசையை வைத்து பிடித்த கடமானின் பசிய கொழுப்புடைய பன்றியோட தசையையும் உண்டு, அதன்பின் முற்றிய தேனால் செறிவூட்டப்பட்ட தெளிந்த கள்ளை மூங்கில் குழாயின் உள்ளேவிட்டு அருந்துங்கள்!  நெல்லாற் சமைத்த கள்(சுண்ட கஞ்சி?) உண்ணுவீராக! கடைசியாய் அருவியில் அடித்து வரப்பட்ட பலாவின் விதையின் மாவையும்,  புளியம்பழத்தையும் அளவாய் கலந்து,  மூங்கிலரிசியால் ஆகிய சோற்றையும் குறமகள் தருவாள் அதனையும் உண்பீராக! என்று பத்துப்பாட்டில் ஒன்றான கூத்தராற்றுப்படை குறிஞ்சித்திணையின் உணவுபழக்கத்தில் ஒன்றினை பற்றி கூறுகிறது. Happy weekend friends